Latest Updates
-
இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நினைத்தது நடக்கும் நாளாக இருக்குமாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...!
முடக்கத்தான் கீரையை இந்த மாதிரி சட்னி செய்யுங்க.. வீட்டுல இருக்குறவங்க 2 இட்லி எஸ்ட்ரா சாப்பிடுவாங்க..
Mudakathan Chutney Recipe In Tamil: உங்களுக்கு மூட்டுவலி பிரச்சனை இருக்கா? சளி அதிகம் பிடித்துள்ளதா? அப்படியானால் முடக்கத்தான் கீரையை உணவில் சேர்த்து வாருங்கள். கீரைகளிலேயே அதிக மருத்துவ குணம் வாய்ந்த ஒரு கீரை என்றால் அது முடக்கத்தான் கீரை தான். இந்த கீரையை பெரும்பாலானோர் அரைத்து தோசை மாவுடன் சேர்த்து கலந்து தோசையாக சுட்டு சாப்பிடுவார்கள்.
ஆனால் அந்த கீரையைக் கொண்டு சட்னி செய்தால், இட்லி தோசைக்கு அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக இந்த கீரையைக் கொண்டு சட்னி செய்வது மிகவும் சுலபம். மலச்சிக்கல், முடக்கு வாதம், சளி, மூலம் போன்றவற்றால் அவதிப்படுபவர்கள் தினமும் உட்கொண்டு வந்தால், விரைவில் நல்ல பலனைப் பெறலாம்.

உங்களுக்கு முடக்கத்தான் சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முடக்கத்தான் கீரை சட்னியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* முடக்கத்தான் கீரை - 1/4 கப்
* துருவிய தேங்காய் - 1/2 கப்
* வரமிளகாய் - 3
* பூண்டு - 2-3 பல்
* நல்லெண்ணெய் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* புளி - ஒரு சிறிய துண்டு
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், குறைவான தீயில் வைத்து முடக்கத்தான் கீரையை
7 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின் வதக்கிய முடக்கத்தான் கீரையை ஒரு தட்டில் தனியாக எடுத்து
வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/2 டேபிள் ஸ்பூன்
நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் துருவிய தேங்காய், புளி, பூண்டு
ஆகியவற்றை சேர்த்து, 2 நிமிடம் நன்கு வதக்கி இறக்கி, அதையும் குளிர
வைக்க வேண்டும்.
* பிறகு வதக்கிய பொருட்கள் அனைத்தையும் குளிர வைத்து மிக்சர் ஜாரில்
போட்டு, புளி, சுவைக்கேற்ப உப்பு மற்றும் நீரை சேர்த்து நன்கு
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளித்து சட்னியுடன்
சேர்த்து கலந்தால், சுவையான முடக்கத்தான் கீரை சட்னி தயார்.
Image Courtesy: swapnaskitchen



Click it and Unblock the Notifications











