Latest Updates
-
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...!
1 கைப்பிடி புதினாவும், 1 கப் வேர்க்கடலையும் இருந்தா.. இந்த மாதிரி ஒருமுறை செய்யுங்க.. செமயா இருக்கும்..
Mint Coriander Peanut Chutney Recipe In Tamil: காலையில் பெரும்பாலும் உங்கள் வீட்டில் இட்லி, தோசை தான் செய்வீர்களா? எப்போதும் இட்லி, தோசைக்கு ஒரே மாதிரியான சட்னி செய்து சாப்பிட்டு போரத்துவிட்டதா? உங்கள் வீட்டில் புதினா, கொத்தமல்லி, வேர்க்கடலை போன்றவை உள்ளதா?
அப்படியானால் அவற்றைக் கொண்டு அட்டகாசமான சுவையில் சட்னியை செய்யுங்கள். இந்த சட்னி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு புதினா கொத்தமல்லி வேர்க்கடலை சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே புதினா கொத்தமல்லி வேர்க்கடலை சட்னியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* பச்சை வேர்க்கடலை - 1 கப்
* பச்சை மிளகாய் - 3
* பூண்டு - 5
* இஞ்சி - 1 துண்டு
* பொட்டுக்கடலை - 3/4 கப்
* புளி - 1 சிறிது
* புதினா - 1 கைப்பிடி
* கறிவேப்பிலை - 1 கைப்பிடி
* துருவிய தேங்காய் - 3/4 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - 1 கைப்பிடி
* தண்ணீர் - தேவையான அளவு
தாளிப்பதற்கு..
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* உளுத்தம் பருப்பு 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* பெருங்காயத் தூள் - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், வேர்க்கடலையை சேர்த்து பொன்னிறமாக நல்ல மணம் வரும்
வரை வறுக்க வேண்டும்.
* பின் அதில் பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி சேர்த்து நன்கு வதக்கி,
பொட்டுக்கடலையை சேர்த்து 2 நிமிடம் வறுக்க வேண்டும்.
* பின்பு அதில் புளி, புதினா, கறிவேப்பிலை சேர்த்து ஒரு முறை வதக்கி
இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* வதக்கிய பொருட்கள் குளிர்ந்ததும், அவற்றை மிக்சர் ஜாரில் போட்டு,
அத்துடன் துருவிய தேங்காய் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து
ஒருமுறை அரைக்க வேண்டும்.
* பின் மூடியைத் திறந்து, 1 கைப்பிடி கொத்தமல்லி மற்றும் சிறிது நீரை
சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து, ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் கருப்பு, சீரகம், கறிவேப்பிலை,
பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால்,
சுவையான புதினா கொத்தமல்லி வேர்க்கடலை சட்னி தயார்.
Image Courtesy: Swasthi's Recipes



Click it and Unblock the Notifications











