ஒருடைம் புதினா சட்னியை இந்த மாதிரி செய்யுங்க.. வீட்டுல இருக்குறவங்க 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க..

Posted By:

Puthina Chutney Recipe In Tamil: காலையில் இட்லிக்கு சட்னி சரியான காம்பினேஷனாக இருக்கும். உங்கள் வீட்டில் காலையில் இட்லி செய்யப் போகிறீர்களா? அந்த இட்லிக்கு என்ன சட்னி செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் புதினா உள்ளதா?

அப்படியானால் அந்த புதினாவைக் கொண்டு சட்னி செய்யுங்கள். அதுவும் வழக்கமாக நீங்கள் செய்யும் புதினா சட்னி போரடித்துவிட்டால், இந்த ஸ்டைலில் ட்ரை செய்யுங்கள். இது நிச்சயம் உங்கள் வீட்டில் உள்ளோர் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

Mint Chutney Version-2 How To Make a Puthina Chutney Recipe

உங்களுக்கு புதினா சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே புதினா சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* எண்ணெய் - 3 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 3
* வெங்காயம் - 1 (நறுக்கியது)
* பூண்டு - 3 பல்
* பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
* தக்காளி - 1 (நறுக்கியது)
* புளி - சிறிய துண்டு
* புதினா - 2 கைப்பிடி
* துருவிய தேங்காய் - 1/4 கப்
* உப்பு - சுவைக்கேற்ப

தாளிப்பதற்கு..

* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடலைப் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
* பின் அதில் வரமிளகாய் சேர்த்து லேசாக வறுத்து, இரண்டையும் ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதே வாணலியில் உள்ள எண்ணெயில் நறுக்கிய வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பிறகு பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் தக்காளியை சேர்த்து லேசாக மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பின் அதில் புளி மற்றும் புதினாவை சேர்த்து, 1 நிமிடம் வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் வறுத்த கடலைப்பருப்பு மற்றும் வரமிளகாய் சேர்த்து, அத்துடன் துருவிய தேங்காய் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து சற்று கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அத்துடன் வதக்கிய வெங்காய புதினா கலவையை சேர்த்து சிறிது நீரை ஊற்றி, சற்று கொரகொரவென்று அரைத்து, ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான புதினா சட்னி தயார்.

Image Courtesy: Tamil Food Corner

[ of 5 - Users]
Story first published: Saturday, August 17, 2024, 7:05 [IST]
Desktop Bottom Promotion