Latest Updates
-
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப குடல் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்!
மீல்மேக்கரை வெச்சு இப்படி வடகறி செய்யுங்க.. சாதத்துடன் சாப்பிட அருமையா இருக்கும்..
Mealmaker Vada Curry Recipe In Tamil: தினமும் ஒரே மாதிரியான குழம்பு செய்து போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான குழம்பு செய்ய நினைக்கிறீர்களா? ஆனால் காய்கறிகள் எதுவும் இல்லையா? உங்கள் வீட்டில் மீல்மேக்கர் உள்ளதா? அப்படியானால் அந்த மீல்மேக்கரைக் கொண்டு அட்டகாசமான சுவையில் வடகறி செய்யுங்கள்.
இந்த மீல்மேக்கர் வடகறி சாதத்துடன் மட்டுமின்றி, சப்பாத்தி, பூரி, இட்லி, தோசையுடன் சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். முக்கியமாக இந்த மீல் மேக்கல் வடகறி செய்வது மிகவும் சுலபம். நீண்ட நேரம் எதுவும் எடுக்காது.

உங்களுக்கு மீல்மேக்கர் வடகறியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மீல்மேக்கர் வடகறி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மீல் மேக்கர் - 1 கப்
* வெங்காயம் - 1/2 (நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது
* கறிவேப்பிலை - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
அரைப்பதற்கு...
* பச்சை மிளகாய் - 4
* இஞ்சி - 1 இன்ச்
* பூண்டு - 6 பல்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* பொட்டுக்கடலை - 1/2 கப்
குழம்பிற்கு...
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* பிரியாணி இலை - 2
* பட்டை - 2
* கிராம்பு - 2
* ஏலக்காய் - 2
* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது
* தக்காளி - 1 (அரைத்தது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* துருவிய தேங்காய் - 1/4 கப்
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது (அலங்கரிக்க)
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் சுடுநீரை எடுத்து, அதில் மீல் மேக்கரை
சேர்த்து, 10-15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி, சோம்பு
ஆகியவற்றை சேர்த்து அரைத்து, அதில் இருந்து பாதியை தனியாக குழம்பிற்கு
எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஜாரில் உள்ள மீதமுள்ளதில் பொட்டுக்கடலை, மிளகாய், தூள்,
மல்லித் தூள் சேர்த்து மென்மையாக அரைத்து பொடி செய்து, அதை ஒரு அகலமான
பௌலில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஊற வைத்துள்ள மீல் மேக்கரை குளிர்ந்த நீரில் 2 முறை அலசி,
அதில் உள்ள அதிகப்படியான நீரை பிழிந்துவிட்டு, மிக்சர் ஜாரில் போட்டு,
சற்று கொரகொரவென்று அரைத்து, அதை அரைத்து வைத்துள்ள பொடியுடன் சேர்க்க
வேண்டும்.
* அதன் பின் பொடியாக நறுக்கி வைத்துள்ள பாதி வெங்காயம், கொத்தமல்லி,
கறிவேப்பிலை, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து வடை பதத்திற்கு நன்கு
பிரட்டி, பின் அவற்றை வடைகளாக தட்டி ஒரு தட்டில் வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், தட்டி வைத்துள்ள வடைகளைப் போட்டு
பொன்னிறமாக பொரித்து எடுத்தால், மீல்மேக்கர் வடை தயார். இதை அப்படியே
கூட ஸ்நாக்ஸாக சாப்பிடலாம்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, ஏலக்காய், கிராம்பு, பிரியாணி இலை
சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அதன் பின் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு
வதங்கியதும், ஏற்கனவே அரைத்து வைத்துள்ள இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாயை
சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* அடுத்து மஞ்சள் தூள், கரம் மசாலா, மல்லித் தூள், மிளகாய் தூள்
சேர்த்து கிளற விட வேண்டும். பின் அரைத்து வைத்துள்ள தக்காளியை
சேர்த்து, எண்ணெய் பிரியும் வரை வதக்க வேண்டும்.
* பின்பு ஒரு கப் நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, 5 நிமிடம்
வேக வைக்க வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் தேங்காயைப் போட்டு சிறிது நீரை ஊற்றி நன்கு
மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அரைத்து வைத்துள்ள தேங்காயை சேர்த்து கிளறி, தேவையான அளவு
நீரையும் ஊற்றி, 10 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* இறுதியாக பொரித்து வைத்துள்ள மீல்மேக்கர் வடைகளை சேர்த்து கிளறி,
மூடி வைத்து 5-7 நிமிடம் வேக வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால்,
சுவையான மீல்மேக்கர் வடகறி தயார்.
Image Courtesy: steffisrecipes



Click it and Unblock the Notifications











