லீவு நாட்களில் ஈவ்னிங் நேரத்துல மீல் மேக்கர் வெச்சு இந்த ஸ்நாக்ஸ் செஞ்சு சாப்பிட்டு பாருங்க...

Posted By:

Meal Maker Cheese Balls Recipe In Tamil: விடுமுறை நாட்களில் தான் வீட்டில் சமைக்கும் உணவுகளை ரசித்து ருசித்து சாப்பிட முடியும். அதுவும் மாலை வேளையில் காபி, டீ குடிக்கும் போது நன்கு மொறுமொறுவென்றும், சூடாகவும் ஸ்நாக்ஸ் செய்து பொறுமையாக சாப்பிடுவதே தனி சுகம் தான்.

இன்று ஸ்பெஷலாக என்ன செய்து சாப்பிடுவது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் மீல் மேக்கர் உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு மீல் மேக்கர் சீஸ் பால்ஸ் செய்யுங்கள். இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

Meal Maker Cheese Balls How To Make a Meal Maker Cheese Balls Recipe

உங்களுக்கு மீல் மேக்கர் சீஸ் பால்ஸ் ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மீல் மேக்கர் சீஸ் பால்ஸ் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* சோயா - 100 கிராம்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2
* மிளகு - 1/2 டீஸ்பூன்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* பூண்டு - 5-6 பல்
* உருளைக்கிழங்கு - 2
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* சீஸ் துண்டுகள்- தேவையான அளவு
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
* வறுத்த சேமியா

கோட்டிங்கிற்கு...

* சோள மாவு - 2 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சிறிது
* மிளகுத் தூள் - சிறிது
* தண்ணீர் - சிறிது

செய்முறை:

* முதலில் மீல் மேக்கரை சுடுநீரில் 2-3 நிமிடம் ஊற வைத்து, அதில் உள்ள அதிகப்படியான நீரை பிழிந்துவிட்டு, மிக்சர் ஜாரில் போட்டுக் கொள்ள வேண்டும்.
* பின் அத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயத்தில் பாதியை போட்டு, அத்துடன் பச்சை மிளகாயை சேர்க்க வேண்டும்.
* அதன் பின் அதில் மிளகு, சோம்பு, பூண்டு ஆகியவற்றை சேர்த்து சற்று கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அரைத்ததை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் மீதமுள்ள நறுக்கிய வெங்காயம் மற்றும் வேக வைத்த உருளைக்கிழங்கை துண்டுகளாக்கி சேர்க்க வேண்டும்.
* பிறகு அதில் மிளகாய் தூள், கரம் மசாலா, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, கைகளால் நன்கு பிசைந்து விட வேண்டும்.
* பின் பிசைந்த கலவையில் இருந்து சிறிது எடுத்து உருண்டையாக உருட்டி, தட்டையாக தட்டி, அதன் நடுவே சிறிய சீஸ் துண்டு வைத்து, உருட்டிக் கொள்ள வேண்டும்.
* இதேப் போல் அனைத்து கலவையையும் சீஸ் வைத்து உருட்டி ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு பாத்திரத்தில் கோட்டிங்கிற்கு சோள மாவு, உப்பு, மிளகுத் தூள் எடுத்து, நீரை ஊற்றி ஓரளவு கெட்டியாக கலந்து கொள்ள வேண்டும். அதே சமயம் ஒரு தட்டில் வறுத்த சேமியாவை எடுத்து, ஒருமுறை கைகளால் நொறுக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்பு உருட்டி வைத்துள்ளதை ஒவ்வொன்றாக எடுத்து, சோள மாவில் பிரட்டி, பின், வறுத்த சேமியாவில் பிரட்டி, தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், உருட்டியதை சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுத்தால, சுவையான மீல்மேக்கர் சீஸ் பால்ஸ் தயார்.

Image Courtesy: Akshaya. com

[ of 5 - Users]
Story first published: Sunday, September 1, 2024, 17:37 [IST]
Desktop Bottom Promotion