Latest Updates
-
கும்ப ராசியில் உதயமாகும் புதன்: மார்ச் 14 முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்... -
எவ்வளவு வயசானாலும் இளமையா காட்சியளிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
காலிஃப்ளவரும், பட்டாணியும் இருந்தா.. இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி வேற லெவல்-ல இருக்கும்.. -
குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்குமாம்...!
1 மாம்பழமும், 1/2 கப் ஜவ்வரிசியும் இருந்தா.. இத செஞ்சு சாப்பிடுங்க.. குளுகுளுன்னு செம டேஸ்ட்டா இருக்கும்..
Mango Kheer Recipe In Tamil: கோடைக்காலம் என்பதால் மாம்பழம் விலை குறைவில் மார்கெட்டுகளில் விற்கப்படுவதைக் காணலாம். இப்படி குறைவான விலையில் மாம்பழம் விற்பதால், நிறைய பேரின் வீடுகளில் மாம்பழம் குவிந்திருக்கும். உங்கள் வீட்டிலும் அப்படி மாம்பழம் குவிந்துள்ளதா? அந்த மாம்பழத்தை சற்று வித்தியாசமாக சாப்பிட விரும்புகிறீர்களா? உங்கள் பிள்ளைகளும் ஏதாவது வித்தியாசமாக சாப்பிட செய்து கொடுக்க கேட்கிறார்களா?
அப்படியானால் வீட்டில் ஜவ்வரிசி இருந்தால், அந்த ஜவ்வரிசியையும், மாம்பழத்தையும் கொண்டு ஜில்லென்று ஒரு அற்புதமான ஸ்வீட் செய்து கொடுங்கள். இந்த மாம்பழ கீர் செய்தால், நொடியில் வீட்டில் உள்ளோர் காலி செய்துவிடுவார்கள். அவ்வளவு ருசியாக இருக்கும். எனவே மிஸ் பண்ணாம, மாம்பழ சீசன் இருக்கும் போதே உங்கள் வீட்டில் உள்ளோருக்கு ஒருமுறை செய்து கொடுங்கள்.

உங்களுக்கு இந்த மாம்பழ கீர் ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மாம்பழ கீர் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மாவு ஜவ்வரிசி - 1/2 கப்
* சுடுதண்ணீர் - 1/4 கப்
* கெட்டியான பால் - 3 கப் அல்லது 1/2 லிட்டர்
* சர்க்கரை - 1/2 கப்
* ஏலக்காய் தூள் - 1/2 டீஸ்பூன்
* மாம்பழ கூழ் - 1 கப்
* மாம்பழத் துண்டுகள் - சிறிது
* பாதாம் - சிறிது (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
* முதலில் ஒரு கிண்ணத்தில் 1/2 கப் மாவு ஜவ்வரிசியை எடுத்து நீரில்
2 முறை கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 1/4 கப் சுடுநீரை ஊற்றி 10 நிமிடம் ஊற வைக்க
வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 கப் கெட்டியான பாலை
ஊற்றி, அடுப்பில் வைத்து, பாலை நன்கு 3-4 நிமிடம் கொதிக்க வைக்க
வேண்டும்.
* பால் நன்கு கொதித்ததும், அதில் சர்க்கரையை 1/2 கப் சேர்த்து கிளறி
விட வேண்டும்.
* அதன் பின் ஏலக்காய் தூளை சேர்த்து கிளறி, அரைத்து வைத்துள்ள
மாம்பழக் கூழை சேர்த்து கிளறி விட்டு, அடுப்பை அணைத்துவிட்டு, ஓரளவு
குளிர வைக்க வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய மாம்பழத் துண்டுகளை சேர்த்து கிளறி
விட வேண்டும்.
* இறுதியாக பொடியாக நறுக்கிய பாதாமை தூவி கிளறி சூடாகவோ அல்லது
ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து நன்கு குளிர வைத்தோ குடிக்கலாம். இப்போது
சுவையான மாம்பழ கீர் தயார்.



Click it and Unblock the Notifications









