Latest Updates
-
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க.. -
Karadaiyan Nombu 2026: தேதி, சடங்குகள் மற்றும் எந்த நேரத்தில் மஞ்சள் சரடு கட்டுவது கணவரின் ஆயுளை அதிகரிக்கும்? -
Panguni Month 2026: பங்குனி மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
120 ஆண்டுக்கு பின் ஏப்ரலில் உருவாகும் திரிகிரக யோகம் 2026: இந்த 3 ராசிகளை கோடீஸ்வரராக்குவது உறுதியாம்...! -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய தக்காளி வெங்காய பச்சடி - சூடான சாதத்துக்கு டக்கரா இருக்கும்.. ட்ரை பண்ணுங்க..
ஒருமுறை மல்லி சட்னியை கையேந்தி பவன் ஸ்டைலில் செய்யுங்க.. அப்புறம் பாருங்க அடிக்கடி செய்வீங்க...
Malli Chutney Without Coconut: காலையில் இட்லி, தோசைக்கு எப்போதும் ஒரே ஸ்டைலில் ஒரே சுவையில் சட்னியை செய்து போரத்துவிட்டதா? அதுவும் உங்கள் வீட்டில் அடிக்கடி கொத்தமல்லி கொண்டு சட்னி செய்வீர்களா? எப்போதும் ஒரே மாதிரி தான் சட்னி செய்வீர்களா?
அப்படியானால் அடுத்தமுறை மல்லி சட்னி செய்வதாக இருந்தால் கையேந்தி பவன் ஸ்டைலில் செய்யுங்கள். இந்த ஸ்டைல் சட்னிக்கு தேங்காய் எதுவும் தேவையில்லை. வீட்டில் உள்ள ஒருசில பொருட்களே போதுமானது. டக்கென்று 10 நிமிடத்தில் செய்யலாம்.

உங்களுக்கு கையேந்தி பவன் ஸ்டைல் மல்லி சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கையேந்தி பவன் ஸ்டைல் மல்லி சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - ந டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 3
* பூண்டு - 10 பல்
* பெரிய வெங்காயம் - 2
* பச்சை மிளகாய் - 1
* உப்பு - சுவைக்கேற்ப
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* புளி - சிறிய துண்டு
* பொட்டுக்கடலை - 1 டேபிள் ஸ்பூன்
* கொத்தமல்லி - 1/2 கட்டு
* தண்ணீர் - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீபூன்
* சிறிய வெங்காயம் - 1
* வரமிளகாய் - 1
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி
சூடானதும், உளுத்தம் பருப்பு மற்றும் கடலைப் பருப்பு சேர்த்து நல்ல
மணம் வரும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் வரமிளகாய், பூண்டு, வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும்
சிறிது உப்பு சேர்த்து நன்கு கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் பெருங்காயத் தூள், புளி, பொட்டுக்கடலை சேர்த்து 2
நிமிடம் வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் கொத்தமல்லியை சேர்த்து லேசாக வதக்கி இறக்கி குளிர
வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து நன்கு அரைத்துக்
கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்து, தேவையான அளவு நீரை
ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்த, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, வெங்காயம், வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து
தாளித்து சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான கையேந்தி பவன்
ஸ்டைல் மல்லி சட்னி தயார்.
Image Courtesy: SIMPLY SAMAYAL



Click it and Unblock the Notifications











