மதுரை ஸ்பெஷல் சின்ன வெங்காய தக்காளி சட்னி ரெசிபி... இந்த சட்னி அரைச்சா எவ்வளவு இட்லி சுட்டாலும் பத்தாது...!

Posted By:

Madurai Tomato Chutney Recipe in Tamil: தமிழ்நாட்டில் உணவுகளின் நகரம் என்றால் அது மதுரைதான். மதுரை உணவுகளுக்கு எப்போதும் தனிரசிகர்கள் உண்டு. அசைவ உணவுகள் மட்டுமின்றி மதுரையில் இட்லி, தோசைக்கு கிடைக்கும் சைடிஷ்கள் கூட மிகவும் தனித்துவமானவையாக இருக்கும். அந்த வகையில் இட்லி, தோசைக்கு மதுரையில் பரிமாறப்படும் தக்காளி சட்னி மிகவும் பிரபலமானது.

தமிழ்நாட்டின் மிகவும் பிரபலமான உணவு காலை மற்றும் இரவு உணவென்றால் அது இட்லி, தோசைதான். தினமும் இட்லி, தோசைக்கு ஒரே மாதிரியான சட்னி அரைக்காமல் இதுபோல வித்தியாசமாக அரைத்துக் கொடுத்தால் வீட்டில் எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த பதிவில் மதுரை ஸ்பெஷல் தக்காளி கார சட்னியை எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

Madurai Tomato Chutney Recipe How to Prepare Madurai Special Thakkali Chutney

தேவையானப் பொருட்கள்:

- நன்கு பழுத்த தக்காளி - 2
- சின்ன வெங்காயம் - 10 முதல் 15
- துருவிய தேங்காய் - 2 ஸ்பூன்
- எண்ணெய் - 1 ஸ்பூன்
- கருப்பு உளுந்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
- வர மிளகாய் - 5
- கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி
- உப்பு - தேவையான அளவு

செய்முறை:

- ஒரு கடாயில் 1 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து 1 டீஸ்பூன் கருப்பு உளுந்தம் பருப்பை சேர்த்து நன்றாக வறுத்து தனியாக எடுத்து வைத்துகொள்ளவும்.
- ஒருவேளை கருப்பு உளுந்து இலையென்றால் வெள்ளை உளுந்து பயன்படுத்தவும்.
- அதே எண்ணெயில் ஒரு ஸ்பூன் கடலைப் பருப்பு சேர்த்து நன்றாக வறுத்து ஓரமாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- அதே கடாயில் 5 வர மிளகாயை சேர்த்து நன்கு வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- அதே பாணியில் கடாயில் ஒரு கைப்பிடி அளவு கறிவேப்பிலை சேர்த்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்
- பின்னர் சின்ன வெங்காயத்தை இரண்டாக நறுக்கி கடாயில் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கி தனியாக வைக்கவும்.
- பின்னர் நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கவும்.
- இப்போது தனியாக எடுத்து வைத்த அனைத்தும் நன்கு ஆறியவுடன் அதில் துருவிய தேங்காயை சேர்த்து கொரகொரவென அரைக்கவும்.
- இந்த சட்னியை தாளிக்க வேண்டிய அவசியமில்லை. இப்போது சூப்பரான மதுரை சின்ன வெங்காய தக்காளி சட்னி ரெடி.
- இதனை சூடான இட்லி, தோசையுடன் பரிமாறினால் வீட்ல எல்லோரும் 2 இட்லி அதிகமாக சாப்பிடுவார்கள்.

[ of 5 - Users]
Story first published: Thursday, December 12, 2024, 13:26 [IST]
Desktop Bottom Promotion