Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
மதுரை ஸ்டைல் மட்டன் சால்னா
உங்களுக்கு மதுரை ஸ்டைல் உணவுகள் என்றால் ரொம்ப பிடிக்குமா? அதிலும் மதுரை ஹோட்டல்களுக்கு சென்றால் பரோட்டாவிற்கு கொடுக்கப்படும் மட்டன் சால்னா என்றால் பலருக்கும் ரொம்ப பிடிக்கும்.
உங்களுக்கு மதுரை ஸ்டைல் உணவுகள் என்றால் ரொம்ப பிடிக்குமா? அதிலும் மதுரை ஹோட்டல்களுக்கு சென்றால் பரோட்டாவிற்கு கொடுக்கப்படும் சால்னா என்றால் பலருக்கும் ரொம்ப பிடிக்கும். அந்த மட்டன் சால்னாவை உங்கள் வீட்டில் செய்ய வேண்டுமா? அப்படியானால் இக்கட்டுரையைத் தொடர்ந்து படியுங்கள்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள மதுரை ஸ்டைல் மட்டன் சால்னா பரோட்டாவிற்கு மட்டுமின்றி, பிரியாணிக்கும் அற்புதமாக இருக்கும். அதோடு இட்லி, தோசைக்கும் சூப்பராக இருக்கும். இப்போது அந்த மதுரை ஸ்டைல் மட்டன் சால்னாவின் எளிய செய்முறையைக் காண்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மட்டன் - 200 கிராம்
* துவரம் பருப்பு - 3 டேபிள் ஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* தண்ணீர் - 1 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
அரைப்பதற்கு...
* தேங்காய் - 3 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* மிளகு - 1/4 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* பட்டை - 1/4 இன்ச்
* கல்பாசி 1/4 டீஸ்பூன்
* கிராம்பு - 2
* ஏலக்காய் - 2
* பிரியாணி இலை - 1
செய்முறை:
* முதலில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸி ஜாரில் போட்டு சிறிது நீர் சேர்த்து பேஸ்ட் போல் மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். அதேப் போல் துவரம் பருப்பை நீரில் ஊற வைத்துக் கொள்ளவும்.
* பின் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட், தக்காளி சேர்த்து 2 நிமிடம், தக்காளி நன்கு மென்மையாகி பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.
* பின் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* அடுத்து அதில் மட்டனை சேர்த்து 2 நிமிடம் கிளறி, மட்டனின் நிறம் மாற ஆரம்பித்ததும், அதில் துவரம் பருப்பை கழுவி சேர்த்து கிளறி விட வேண்டும்.
* பிறகு அதில் தேவையான அளவு நீர் ஊற்றி, குக்கரை மூடி 8 விசில் விட்டு இறக்கி, விசில் போனதும் குக்கரைத் திறக்க வேண்டும்.
* மீண்டும் குக்கரை அடுப்பில் வைத்து, கிரேவி கொதிக்க ஆரம்பித்ததும், அரைத்து வைத்துள்ள தேங்காயை ஊற்றி, மீண்டும் 3-4நிமிடம் கொதிக்க வைத்து, மேலே கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், மதுரை ஸ்டைல் மட்டன் சால்னா ரெடி!



Click it and Unblock the Notifications











