Latest Updates
-
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப குடல் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
ஆங்கிலேயர்களுக்கே கடன் கொடுத்து இந்தியாவில் முதன் முதலாக கார் வாங்கிய பணக்கார வியாபாரி யார் தெரியுமா? -
மீன ராசியில் அஸ்தமனமாகும் சனி பகவான்: மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்...
மதுரை முனியாண்டி விலாஸ் ஸ்டைல் சிக்கன் குழம்பை எப்படி செய்யணும் தெரியுமா?
Madurai Munniyandi Vilas Style Chicken Kuzhambu Recipe: புத்தாண்டு ஸ்பெஷலாக உங்கள் வீட்டில் உள்ளோருக்கு ஸ்பெஷலாக ஏதாவது செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் அசைவம் சமைப்பீர்களானால், மதுரை முனியாண்டி விலாஸ் ஸ்டைல் சிக்கன் குழம்பை செய்யுங்கள். இந்த குழம்பு சாதத்துடன் மட்டுமின்றி, இட்லி, தோசை போன்றவற்றுடன் சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். மேலும் இது செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும்.
உங்களுக்கு மதுரை முனியாண்டி விலாஸ் ஸ்டைல் சிக்கன் குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மதுரை முனியாண்டி விலாஸ் ஸ்டைல் சிக்கன் குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
* சிக்கன் - 1 கிலோ
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 1 (நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
* தேங்காய் பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* கொத்தமல்லி - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
வறுத்து அரைப்பதற்கு...
* வரமிளகாய் - 6
* மல்லி - 1 டேபிள் ஸ்பூன்
* பச்சரிசி - 1 டீஸ்பூன்
* மிளகு - 1 டீஸ்பூன்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* கசகசா - 1 டீஸ்பூன்
* பொட்டுக்கடலை - 1 டீஸ்பூன்
* பட்டை - 1 இன்ச்
* கிராம்பு - 3
* துருவிய தேங்காய் - 1 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* பிரியாணி இலை - 1
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
செய்முறை:
* முதலில் சிக்கனை நன்கு கழுவி தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வரமிளகாய், மல்லி,
பச்சரிசி, மிளகு, சோம்பு, கசகசா, பொட்டுக்கடலை, பட்டை, கிராம்பு,
துருவிய தேங்காய் ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து நல்ல மணம் வரும் வரை
வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு பொடி செய்து
தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு மற்றொரு அகலமான வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, பிரியாணி இலை, சோம்பு, வரமிளகாய் ஆகியவற்றை
சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் கறிவேப்பிலை, பச்சை மிளகாய், வெங்காயம் ஆகியவற்றை
சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட்டை சேர்த்து பச்சை வாசனை போக வாக்க
வேண்டும். அதன் பின் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க
வேண்டும்.
* பின்னர் அதில் கழுவிய சிக்கன் துண்டுகளை சேர்த்து நிறம் மாறும் வரை
வதக்க வேண்டும். அடுத்து அரைத்த பொடியை சேர்த்து நன்கு கிளறி விட
வேண்டும்.
* பின்பு அதில் 2 கப் நீரை ஊற்றி, தேங்காய் பேஸ்ட்டை சேர்த்து நன்கு
கிளறி விட்டு, 5-8 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* பின் தீயைக் குறைத்து, 5 நிமிடம் சிக்கனை எண்ணெய் பிரியும் வரை
கொதிக்க வைக்க வேண்டும்.
* இறுதியாக கொத்தமல்லியைத் தூவி இறக்கி, மூடி வைத்து 1 மணிநேரம்
கழித்து பரிமாற வேண்டும்.
Image Courtesy: naliniscooking



Click it and Unblock the Notifications











