Latest Updates
-
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க!
ஹோட்டல் ஸ்டைல் லெமன் சிக்கன் ரெசிபி... சண்டேவை சூப்பராக மாற்ற இந்த ஈஸியான சிக்கனை ட்ரை சமைச்சு கொடுங்க...!
Lemon Chicken Recipe in Tamil: சண்டே என்றாலே நமக்கு முதலில் நினைவிற்கு வருவது அசைவ உணவுதான், சொல்லப்போனால் பலருக்கு சண்டே வருவதே அசைவ உணவு சாப்பிடத்தான். அசைவ உணவுகளில் பெரும்பாலான நபர்களுக்கு விருப்பமானது சிக்கன்தான். அதற்கு முதல் காரணம் மட்டனோடு ஒப்பிடும்போது சிக்கனின் விலை மற்றும் சிக்கனின் அருமையான சுவை.
அது மட்டுமின்றி மட்டனை விட சிக்கனை பல வழிகளில் சமைக்கலாம். ஒவ்வொரு வாரமும் ஒரு புதிய சிக்கன் ரெசிபி முயற்சிப்பது மிகவும் சுவாரஸ்யமானதாக இருக்கும். அந்த வகையில் இந்த வாரம் உங்கள் வீட்டில் நீங்கள் ட்ரை பண்ண சூப்பரான ஒரு சிக்கன் ரெசிபிதான் லெமன் சிக்கன். இந்த சிக்கன் செய்வதற்கு எளிதானது, ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது மற்றும் சுவையானது. இந்த பதிவில் இந்த சூப்பரான சிக்கனை எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

தேவையானப் பொருட்கள்:
அரைக்க:
- நறுக்கிய வெங்காயம் - 1
- பூண்ட - 5 பல்
- நறுக்கிய இஞ்சி - 1 துண்டு
- தண்ணீர் - கால் கப்
மேரினேட் செய்ய:
- சிக்கன் - அரை கிலோ(தொடைப்பகுதி சிறந்தது)
- தயிர் - 3 ஸ்பூன்
- மஞ்சள் - அரை ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- நறுக்கிய பச்சை மிளகாய் - 3
- எலுமிச்சைச்சாறு - 2 ஸ்பூன்
பிற பொருட்கள்:
- கடலை எண்ணெய் - 2 ஸ்பூன்
- கரம் மசாலா தூள் - 1 ஸ்பூன்
- நறுக்கிய குடைமிளகாய் - 1
- பட்டர் - 2 ஸ்பூன்
- எலுமிச்சைச்சாறு - 1 ஸ்பூன்
செய்முறை:
- வெங்காயம், பூண்டு மற்றும் இஞ்சியை கால் கப் தண்ணீரில் மென்மையான பேஸ்ட்டாக அரைத்து வைத்துக் கொள்ளவும். இதை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி ஓரமாக வைக்கவும்.
- சிக்கனை நன்கு கழுவி ஒரு பாத்திரத்தில் வைத்து அதில் அரைத்து வைத்த விழுது மற்றும் மேரினேட் செய்த பொருட்களை சேர்த்து கலந்து நன்கு கிளறவும். இதை நன்றாக கலந்து 20 நிமிடம் ஊற வைக்கவும்.
- ஒரு நான்ஸ்டிக் கடாயில் எண்ணெயை ஊற்றி, அதில் மேரினேட் செய்யப்பட்ட சிக்கனைச் சேர்க்கவும். இதை மூடிவைத்தி 10 நிமிடம் வேக வைக்கவும். பின்னர் மூடி இல்லாமல் மற்றொரு 5 நிமிடங்கள் வேக வைக்கவும்.
- சிக்கன் பாதி வெந்தவுடன் அதில் கரம் மசாலாவை சேர்த்து கிளறவும்.
- சிக்கன் முக்கால்வாசி வெந்ததும் அதில் குடை மிளகாய் மற்றும் வெண்ணெயை சேர்க்கவும். வெண்ணெயை சிக்கன் முழுவதும் நன்கு படும்படி கிளறவும்.
- சிக்கனை இறக்குவதற்கு முன்னர் அதில் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறை கலந்து நன்கு கிளறவும்.
- இப்போது அடுப்பை அணைத்து சிக்கனை இறக்கவும். சூடான லெமன் சிக்கன் ரெடி!



Click it and Unblock the Notifications











