Latest Updates
-
இன்றைய ராசிபலன் 09 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம்...! -
கும்ப ராசியில் உதயமாகும் புதன்: மார்ச் 14 முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்... -
எவ்வளவு வயசானாலும் இளமையா காட்சியளிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
காலிஃப்ளவரும், பட்டாணியும் இருந்தா.. இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி வேற லெவல்-ல இருக்கும்.. -
குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்..
1 கப் மீந்து போன சாதமும், 1 முட்டையும் இருந்தா.. ஒருவாட்டி இத ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்..
Leftover Rice Poori Recipe In Tamil: உங்கள் வீட்டில் மதியம் சமைத்த சாதம் உள்ளதா? எப்போதும் வீட்டில் சாதம் மீந்து போகுமா? அப்படி மீந்து போகும் சாதத்தை வீணடிக்க மனமில்லையா? அப்படியானால் அந்த சாதத்தைக் கொண்டு அருமையான சுவையில் பூரி செய்யுங்கள்.
அதுவும் இந்த பூரிக்கு கடலைப் பருப்பு கொண்டு கிரேவி செய்யும் போது, இன்னும் பிரமாதமாக இருக்கும். இந்த மாதிரி பூரியை மாலை வேளையில் ஸ்நாக்ஸ் போன்றும் செய்து கொடுக்கலாம் அல்லது காலை, இரவு வேளையிலும் சமைத்து கொடுக்கலாம். இது நிச்சயம் ஒரு வித்தியாசமான அனுபவத்தை தரும்.

உங்களுக்கு மீந்து போன சாதத்தைக் கொண்டு எப்படி பூரி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மீந்து போன சாதத்தைக் கொண்டு செய்யக்கூடிய பூரியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
பூரிக்கு...
* சாதம் - 1 கப்
* முட்டை - 1
* துருவிய தேங்காய் - 1/2 கப்
* தண்ணீர் - 1/4 கப்
* ரவை - 1 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* அரிசி மாவு - 1/4 கப்
* எண்ணெய் - 1/2 டீஸ்பூன்
மசாலா அரைப்பதற்கு..
* தக்காளி - 3
* கிராம்பு - 3
* பட்டை - சிறிய துண்டு
* முந்திரி - 4
* துருவிய தேங்காய் - 1/2 கப்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* மிளகு - 1/2 டீஸ்பூன்
* தண்ணீர் - சிறிது
கிரேவிக்கு...
* எண்ணெய் - 2 ஸ்பூன்
* பிரியாணி இலை - 1
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (கீறியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டீஸ்பூன்
* குழம்பு மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1/2 கப்
* தண்ணீர் - சிறிது
* கொத்தமல்லி - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் 1 கப் சாதத்தை போட்டு, அத்துடன் 1
முட்டையை உடைத்து ஊற்றிக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் துருவிய தேங்காய் மற்றும் 1/4 கப் நீரை ஊற்றி நன்கு
மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு பாத்திரத்தில் அரைத்ததை எடுத்துக் கொண்டு, அத்துடன் ரவை,
சுவைக்கேற்ப உப்பு, அரிசி மாவு சேர்த்து, நன்கு பிசைந்து கொள்ள
வேண்டும்.
* அதன் பின் அதில் 1/2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி தடவி, 10 நிமிடம் மூடி
வைத்து ஊற வைக்க வேண்டும்.
* அடுத்து மிக்சர் ஜாரில் தக்காளி, கிராம்பு, பட்டை, முந்திரி,
துருவிய தேங்காய், சோம்பு, மிளகு சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு
மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு கிரேவி செய்ய, ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 2 ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், பிரியாணி இலை, சோம்பு, சீரகம் சேர்த்து
தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கீறிய பச்சை மிளகாய், இஞ்சி
பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள தக்காளி விழுதை சேர்த்து கிளறி விட
வேண்டும்.
* அதன் பின் அதில் குழம்பு மிளகாய் தூள் சேர்த்து, 1/2 கப் கடலைப்
பருப்பை நீரில் 2 முறை கழுவிவிட்டு சேர்த்து கிளறி விட வேண்டும்.
* பிறகு அதில் கிரேவிக்கு தேவையான அளவு நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு
சேர்த்து, கொத்தமல்லியைத் தூவி கிளறி, குக்கரை மூடி 2 விசில் விட்டு
இறக்கினால், கிரேவி தயார்.
* அடுத்து கைகளில் தண்ணீரை தொட்டு, பிசைந்து ஊற வைத்துள்ள மாவை
கொஞ்சம் எடுத்து உருட்டி ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், உருட்டி வைத்துள்ள உருண்டைகளை எடுத்து
தட்டையாக தட்டி, எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால், பூரி
தயார்.
* இந்த பூரிக்கு, கடலைப்பருப்பு கிரேவி சூப்பர் காம்பினேஷனாக
இருக்கும்.



Click it and Unblock the Notifications




