Latest Updates
-
வார ராசிபலன் (01 March 2026-07 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும்! -
மட்டன் வாங்குனா இந்த மாதிரி நெல்லூர் ஸ்டைலில் குழம்பு வைச்சு பாருங்க... தோசை, சாதத்துக்கு சூப்பரா இருக்கும்... -
திரிகிரக யோகம் கும்ப ராசியில் உருவாவதால் இந்த 3 ராசிக்காரர்களை தோல்வியும், துரதிர்ஷ்டமும் துரத்தப்போகுதாம்...! -
1 கப் கோதுமை ரவா இருந்தா இந்த மாதிரி அடை செஞ்சு பாருங்க... சூப்பரான காலை உணவா இருக்கும்... ட்ரை பண்ணுங்க...! -
இந்தியாவின் முதல் பெண்களுக்கான பள்ளி எப்போது திறக்கப்பட்டது? எந்த ஊரில் திறக்கப்பட்டது தெரியுமா? -
உருளைக்கிழங்கை ஒருதடவை இந்த மாதிரி கொங்குநாடு ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க...டக்கரான சைடிஷா இருக்கும்...! -
அமெரிக்க-ஈரான் போரால் துபாயில் சரசரவென குறையும் தங்கம் விலை...இந்தியாவிலும் தங்கம் விலை குறையுமா? உண்மை என்ன? -
இந்த 4 ராசிக்காரங்க உயிரை கொடுத்தாவது குடும்பத்தை பாதுகாக்கும் ரியல் ஹீரோவாக இருப்பார்களாம்...உங்க ராசி என்ன? -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. தொப்பையும், உடல் எடையும் இருமடங்கு வேகத்துல குறையும்.. -
இன்றைய ராசிபலன் 07 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம்...!
வீட்டுல கொத்தமல்லி நிறைய இருக்கா? அப்ப மதியம் சாதத்துக்கு இப்படி செஞ்சு சாப்பிடுங்க... டேஸ்ட் அள்ளும்..
Coriander Thuvaiyal Recipe In Tamil: மதிய வேளையில் தினமும் சாம்பார், புளிக்குழம்பு என்று செய்து போரடித்துவிட்டதா? சிம்பிளாக அதே சமயம் சுவையான ஒரு சைடு டிஷ்ஷை சாதத்துக்கு செய்ய வேண்டுமா? உங்கள் வீட்டில் கொத்தமல்லி நிறைய உள்ளதா? அப்படியானால் அந்த கொத்தமல்லியைக் கொண்டு துவையல் செய்யுங்கள்.
இந்த துவையலை ஒருமுறை செய்தால் ஒரு வாரம் வரை வைத்து சாப்பிடலாம். அதுவும் இது சாதத்துடன் மட்டுமின்றி, இட்லி, தோசை போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடவும் அருமையாக இருக்கும். முக்கியமாக இது செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும்.

உங்களுக்கு கொத்தமல்லி துவையலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கொத்தமல்லி துவையல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 25
* பூண்டு - 25 பல்
* இஞ்சி - 2 இன்ச் (பொடியாக நறுக்கியது)
* வரமிளகாய் - 15
* கொத்தமல்லி - 2 கட்டு
* புளி - 1 எலுமிச்சை அளவு (நீரில் ஊற வைத்தது)
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
* தாளிப்பு வடகம் - சிறிது
செய்முறை:
* முதலில் எலுமிச்சை அளவு புளியை எடுத்து சிறிது நீர் ஊற்றி ஊற
வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன்
நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி
ஆகியவற்றை சேர்த்து நன்கு நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.
* பின்பு அதில் வரமிளகாயை சேர்த்து நன்கு 1 நிமிடம் வதக்க
வேண்டும்.
* அடுத்து சுத்தம் செய்து நீரில் அலசிய 2 கட்டு கொத்தமல்லியை சேர்த்து
1 நிமிடம் வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, பின் அத்துடன் ஊற
வைத்த புளியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பை தூவி நன்கு மென்மையாக
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 4 டேபிள் ஸ்பூன்
நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பு வடகத்தை சேர்த்து தாளித்து,
அரைத்ததை ஊற்றி, நிறம் மாறி சுருளும் வரை வதக்கி இறக்கினால், சுவையான
கொத்தமல்லி துவையல் தயார்.



Click it and Unblock the Notifications











