கொங்குநாடு ஸ்டைல் கடலை குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க..

Posted By:

Kongunadu Style Sundal Kuzhambu Recipe In Tamil: உங்கள் வீட்டில் சுண்டல் குழம்பை அடிக்கடி செய்வீர்களா? எப்போதும் ஒரே மாதிரியான சுவையில் தான் சுண்டல் குழம்பை செய்வீர்களா? அப்படியானால் ஒருமுறை கொங்குநாடு ஸ்டைலில் சுண்டல் குழம்பை செய்யுங்கள்.

இப்படி குழம்பு செய்யும் போது, அது சாதத்துடன் மட்டுமின்றி, இட்லியுடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். முக்கியமாக இந்த குழம்பு மட்டன் குழம்பை போன்று மிகவும் சுவையாக இருக்கும். ஒருமுறை இப்படி சுண்டல் குழம்பை செய்தால், பின் அடிக்கடி இப்படிதான் செய்வீர்கள்.

Kongunadu Style Kadalai Kulambu How To Make a Kongunadu Style Sundal Kuzhambu

உங்களுக்கு கொங்குநாடு ஸ்டைல் சுண்டல் குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கொங்குநாடு ஸ்டைல் கடலை குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* கருப்பு கொண்டைக்கடலை - 1 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* புளி - 1 பெரிய நெல்லிக்காய் அளவு (நீரில் ஊற வைத்து, சாறு எடுத்துக் கொள்ளவும்)

வறுப்பதற்கு..

* நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்
* மல்லி - 2 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1/2 டேபிள் ஸ்பூன்
* மிளகு - 1 டீஸ்பூன்
* வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
* வரமிளகாய் - 6
* காஷ்மீரி மிளகாய் - 4
* துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்

வதக்குவதற்கு...

* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 200 கிராம்
* பூண்டு - 10 பல்
* தக்காளி - 1 (நறுக்கியது)

தாளிப்பதற்கு...

* நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பூண்டு - 4 பல் (பொடியாக நறுக்கியது)
* சின்ன வெங்காயம் - 10 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1 (நறுக்கியது)
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* கத்திரிக்காய் - 3
* உருளைக்கிழங்கு - 1
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

* முதலில் கருப்பு கொண்டைக்கடலையை நீரில் 2 முறை கழுவி, பின் நீரை ஊற்றி 7-8 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் புளியை நீரில் ஊற வைத்து பிசைந்து வடிகட்டி சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், மல்லி, சீரகம், மிளகு, வெந்தயம், வரமிளகாய், காஷ்மீரி வரமிளகாய் சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுக்க வேண்டும்.
* அதன் பின் அதில் துருவிய தேங்காயை சேர்த்து வறுத்து இறக்கி, ஒரு தட்டில் போட்டு குளிர வைக்க வேண்டும்.
* பின் அதே வாணலியில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து நன்கு நிறம் மாற வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து, மென்மையாகும் வரை வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்து கொரகொரவென்று அரைத்து, பின் வதக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்த்து சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு அகலமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், வெந்தயம், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அதன் பின் நறுக்கிய பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் காஷ்மீரி மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து கிளறி, அரைத்து வைத்துள்ள மசாலா மற்றும் புளிச்சாற்றினை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி கிளறி, மூடி வைத்து 3 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* பின்னர் அதில் வேக வைத்துள்ள சுண்டலை நீருடன் அப்படியே சேர்த்து, அதோடு நறுக்கிய கத்திரிக்காய், உருளைக்கிழங்கு சேர்த்து, உப்பு சுவை பார்த்து, வேண்டுமானால் உப்பை சேர்த்து கலந்து, மூடி வைத்து, 10 நிமிடம் நன்கு கொதிக்க வைத்து, கொத்தமல்லியைத் தூவினால், சுவையான கொங்குநாடு ஸ்டைல் சுண்டல் குழம்பு தயார்.

[ of 5 - Users]
Story first published: Monday, January 19, 2026, 14:57 [IST]
Desktop Bottom Promotion