சாதம், சப்பாத்திக்கு அட்டகாசமாக இருக்கும்.. கொங்குநாடு சிக்கன் மசாலா

உங்கள் வீட்டில் உள்ளோர் சிக்கனை சமைத்து தர கேட்கிறார்களா? அப்படியானால் கொங்குநாடு சிக்கன் மசாலா செய்யுங்கள். இந்த சிக்கன் மசாலா சாதத்துடன் மட்டுமின்றி, சப்பாத்தி, பூரி ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும

Posted By:

உங்கள் வீட்டில் உள்ளோருக்கு வாய்க்கு ருசியாக சமைத்து தர விரும்புகிறீர்களா? உங்கள் வீட்டில் உள்ளோர் சிக்கனை சமைத்து தர கேட்கிறார்களா? அப்படியானால் கொங்குநாடு சிக்கன் மசாலா செய்யுங்கள். இந்த சிக்கன் மசாலா சாதத்துடன் மட்டுமின்றி, சப்பாத்தி, பூரி ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். முக்கியமாக இந்த ரெசிபியை மாலை அலுவலகம் முடிந்து வீட்டிற்கு சென்றதும் சீக்கிரம் செய்யக்கூடிய வகையில் ஈஸியான செய்முறையைக் கொண்டது. இந்த சிக்கன் மசாலாவின் சுவை வழக்கமாக செய்யும் மசாலாவை விட வித்தியாசமான சுவையைக் கொண்டதால், அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

Kongunadu Chicken Masala Recipe In Tamil

உங்களுக்கு கொங்குநாடு சிக்கன் மசாலா ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கொங்குநாடு சிக்கன் மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

ஊற வைப்பதற்கு...

* சிக்கன் - 200 கிராம்

* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்

* எலுமிச்சை - 1 (சாறு எடுத்துக் கொள்ளவும்)

* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்

அரைப்பதற்கு...

* பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)

* சோம்பு - 1 டீஸ்பூன்

* சீரகம் - 1 டீஸ்பூன்

* கசகசா - 1 டீஸ்பூன்

* மிளகு - 1 டீஸ்பூன்

* துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்

* மல்லித் தூள் - 2 டேபிள் ஸ்பூன்

* வரமிளகாய் - 3

பிற பொருட்கள்...

* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)

* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)

* பூண்டு - 4 பல் (பொடியாக நறுக்கியது)

* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

* கிராம்பு - 2

* பட்டை - 1 இன்ச்

* சோம்பு - 1/2 டீஸ்பூன்

* உப்பு - சுவைக்கேற்ப

* எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

* முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.

* பின் அந்த சிக்கனுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட், ஒரு எலுமிச்சையின் சாறு, மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு பிரட்டி, 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம், மிளகு, வரமிளகாய் ஆகியவற்றை சேர்த்து வறுக்க வேண்டும்.

* பின் அதில் வெங்காயம் மற்றும் கசகசாவை சேர்த்து 5-7 நிமிடம் வெங்காயம் நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.

* பிறகு அதில் மல்லித் தூளை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.

* கலவையானது நன்கு குளிர்ந்ததும், அதை மிக்சர் ஜாரில் போட்டு, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பின் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, சோம்பு ஆகியவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும்.

* அடுத்து அதில் நறுக்கிய பூண்டு, வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.

* அதன் பின் தக்காளியை சேர்த்து, சிறிது உப்பு தூவி நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.

* பின்னர் அதில் ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து, ஒரு 5 நிமிடம் வதக்க வேண்டும்.

* பின் அதில் அரைத்த மசாலாவுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளறி, சிறிது நீரை ஊற்றி, குக்கரை மூடி 4 விசில் விட்டு இறக்கினால், சுவையான கொங்குநாடு சிக்கன் மசாலா தயார்.

Image Courtesy: archanaskitchen

[ of 5 - Users]
Story first published: Wednesday, March 1, 2023, 14:27 [IST]
Desktop Bottom Promotion