Just In
- 8 hrs ago
ஹை பிபி உள்ளவர்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள்!
- 8 hrs ago
உங்க கொலஸ்ட்ரால் அளவு மற்றும் பிபியை குறைக்க இந்த 3 பொருட்கள் கலந்த பானத்தை குடிச்சா போதுமாம்!
- 9 hrs ago
இந்த பொருட்களை எவ்வளவு வருஷம் வேணாலும் வைத்து சாப்பிடலாமாம் கெட்டேப்போகாதாம் தெரியுமா?
- 10 hrs ago
Karandi omelette : கரண்டி ஆம்லெட்
Don't Miss
- News
வெளியே போயிடுங்க.! இல்லைனா சாக ரெடியா இருங்க..! காஷ்மீர் பண்டிட்களுக்கு லஷ்கர் இ இஸ்லாம் மிரட்டல்..!
- Finance
இளம் வயதில் வீடு வாங்குவது ஸ்மார்ட்டான முடிவு.. ஏன் தெரியுமா?
- Movies
அக்காவால் தங்கை குடும்பத்தில் சிக்கல்… மன வேதனையில் பிரபல நடிகர் !
- Sports
ரன் ஓடும் போது நிகழ்ந்த காமெடி.. ஒரே இடத்தில் 2 பேட்ஸ்மேன்.. டெல்லி வைத்த டிவிஸ்ட்.. ரசிகர்கள் கலகல
- Technology
சரியான வாய்ப்பு., ரூ.2000 தள்ளுபடி- ரூ.4,499-க்கு ஜியோபோன் நெக்ஸ்ட் வாங்கலாம்: இதோ வழிமுறைகள்!
- Automobiles
இதை எதிர்பாக்கவே இல்ல... மாருதி நிறுவனம் பாத்து பாத்து உருவாக்கிய பாதுகாப்பான காருக்கு இப்படி ஒரு நிலைமையா?
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கொங்குநாடு சிக்கன் ப்ரை
தமிழ்நாட்டில் செட்டிநாடு ரெசிபிக்கள் மட்டுமின்றி கொங்குநாடு ரெசிபிக்களும் பிரபலமானவை. இவற்றில் உள்ள வித்தியாசம் அவற்றின் மசாலா தான். ஆனால் இவை இரண்டுமே தனித்துவமான சுவையைக் கொண்டிருக்கும். நீங்கள் வீட்டில் இந்த வார இறுதியில் வித்தியாசமான ஒரு சிக்கன் ரெசிபியை முயற்சிக்க நினைத்தால், கொங்குநாடு சிக்கன் ப்ரை ட்ரை செய்யுங்கள். இது செய்வதும் சுலபம் மற்றும் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.
உங்களுக்கு கொங்குநாடு சிக்கன் ப்ரை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கொங்குநாடு சிக்கன் ப்ரை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வறுத்து அரைப்பதற்கு...
* பட்டை - 2 இன்ச்
* மிளகு - 1 டீஸ்பூன்
* மல்லி - 3 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* கசகசா - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 10
* கொப்பறை தேங்காய் - 5 டேபிள் ஸ்பூன்
சிக்கனுக்கு...
* சிக்கன் துண்டுகள் - 1 கப்
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் - 1
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கறிவேப்பிலை - ஒரு கையளவு
* கொத்தமல்லி - சிறிது
* தண்ணீர் - 1 கப்
செய்முறை:
* முதலில் சிக்கனை மஞ்சள் தூள் சேர்த்து நன்கு நீர் ஊற்றி கழுவிக் கொள்ள வேண்டும்.
* ஒரு நாண்-ஸ்டிக் கடாயை அடுப்பில் வைத்து, அதில் பட்டை, கிராம்பு, மிளகு, மல்லி, சோம்பு மற்றும் கசகசாவை சேர்த்து நன்கு மணம் வரும் வரை வறுத்து, அத்துடன் வரமிளகாய் மற்றும் கொப்பறை தேங்காய் சேர்த்து ஒரு நிமிடம் வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு நீர் சிறிது ஊற்றி நன்கு பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* பின்பு அதில் கழுவிய சிக்கன், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கி, சிக்கன் வெள்ளையாக நிறம் மாறும் போது, அதல் அரைத்த மசாலாவை சேர்த்து கிளறி, மிதமான தீயில் சிக்கனை நன்கு வேக வைக்க வேண்டும்.
* சிக்கனில் இருந்து எண்ணெய் தனியாக பிரிய ஆரம்பிக்கும் போது, உங்களுக்கு கிரேவி போன்று வேண்டுமானால், சிறிது நீர் ஊற்றிக் கொள்ளலாம். இல்லாவிட்டால், அதன் மேல் கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், கொங்குநாடு சிக்கன் ப்ரை தயார்.
Image Courtesy: archanaskitchen