Latest Updates
-
இந்த 4 ராசிக்காரங்க காதலில் அதிர்ஷ்டமே இல்லாதவர்களாம் - இவங்க எதிர்பார்க்கும் எதுவுமே நடக்காதாம் -
1 கப் பச்சை பயறு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இத பசங்களுக்கு செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன? -
உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. -
மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் ரெசிபி - 4 முட்டை இருந்தா போதும் - தரமான சைடிஷ் ரெடி! -
15000 கோடி முகேஷ் அம்பானி வீட்டை விட பெரிய வீடு இந்தியாவிலுள்ள இந்த வீடுதானாம் - இந்த வீடு யாருடையது தெரியுமா? -
October Matha Rasipalan 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமானதா இருக்கப்போகுது! -
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறையும்.. -
செப்டம்பர் 24, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கபோகுதாம் - சந்தோஷமா இருங்க -
அக்டோபரில் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது!
விளக்கெண்ணெயுடன் இந்த 5 எண்ணெயை கலந்து யூஸ் பண்ணுங்க.. தலைமுடி 2 மடங்கு வேகத்துல வளரும்..
Hair Care Tips In Tamil: ஒருவரது அழகை மேம்படுத்திக் காட்டுவதில் தலைமுடி முக்கிய பங்கை வகிக்கிறது. ஆனால் தற்போதைய மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்களால், உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி, தலைமுடியின் ஆரோக்கியமும் பாழாகிறது. இப்படி தலைமுடியின் ஆரோக்கியம் குறைந்தால், அதன் வளர்ச்சியும், வலிமையும் குறைந்து, உதிரத் தொடங்கிவிடும். இவ்வாறு தலைமுடி உதிர்வதை கண்டு கொள்ளாமல் விட்டால், நாளடைவில் வழுக்கை ஏற்பட்டுவிடும்.

உங்களுக்கும் தலைமுடி அதிகம் கொட்டுகிறதா? தலைமுடியின் வலிமையையும் வளர்ச்சியையும் அதிகரிக்க வேண்டுமா? அப்படியானால் தலைமுடியின் மயிர்கால்களுக்கு ஊட்டமளிக்கும் எண்ணெய்களைக் கொண்டு தலைமுடிக்கு பராமரிப்பு கொடுங்கள். காலம் காலமாக தலைமுடியை பராமரிக்க பயன்படுத்தி வரும் ஒரு எண்ணெய் தான் தேங்காய் எண்ணெய்.
ஆனால் தலைமுடியின் வளர்ச்சியை தூண்டுவதில் சிறந்த எண்ணெய் என்றால் அது விளக்கெண்ணெய் தான். அதுவும் இந்த எண்ணெயுடன் குறிப்பிட்ட சில எண்ணெய்களை கலந்து பயன்படுத்தும் போது, தலைமுடி இருமடங்கு வேகத்தில் வளரும். இப்போது அந்த எண்ணெய்கள் எவையென்பதையும், அவற்றை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதையும் காண்போம்.
1. தேங்காய் எண்ணெய்
* விளக்கெண்ணெயுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து பயன்படுத்தும் போது, தலைமுடி இருமடங்கு வேகத்தில் வளரும். அதற்கு 1 டேபிள் ஸ்பூன் விளக்கெண்ணெயுடன் 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அந்த எண்ணெயை இரவு தூங்கும் முன் ஸ்கால்ப்பில் படும்படி தடவி நன்கு சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும்.
* பின்பு தலையில் ஷவர் கேப்பை அணிந்து கொண்டு, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.
2. பாதாம் எண்ணெய்
* பாதாம் எண்ணெயில் வைட்டமின் ஈ அதிகமாக உள்ளது மற்றும் இது தலைமுடி மெலிவதையும், தலைமுடி உதிர்வதையும் தடுக்க உதவுகிறது. இப்படிப்பட்ட பாதாம் எண்ணெய் மற்றும் விளக்கெண்ணெயை சரிசம அளவில் எடுத்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை ஸ்கால்ப்பில் தடவி, சிறிது நேரம் மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும்.
* பிறகு தலையில் ஷவர் கேப்பை அணிந்து, இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.
* மறுநாள் காலையில் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.
3. ரோஸ்மேரி ஆயில்
நல்ல நறுமணமிக்க ரோஸ்மேரி எண்ணெய் ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து தலைமுடியின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். இந்த ரோஸ்மேரி ஆயிலை சில துளிகள் விளக்கெண்ணெயுடன் சேர்த்து கலந்து கொண்டு, அந்த எண்ணெயை ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்து ஊற வைத்து, மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும். இந்த எண்ணெய் கலவையை அதிகமாக தலைமுடிக்கு பயன்படுத்த வேண்டாம்.
4. ஆலிவ் ஆயில்
வறண்ட தலைமுடியைக் கொண்டவர்கள் ஆலிவ் ஆயிலை விளக்கெண்ணெயுடன் சேர்த்து கலந்து பயன்படுத்த வேண்டும். இதனால் தலைமுடி பட்டுப்போன்று மென்மையாக இருக்கும். அதுவும் இந்த எண்ணெய் கலவையை ஸ்கால்ப் மற்றும் முடியில் படும்படி தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, ஷவர் கேப் அணிந்து இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.
5. ஜொஜோபா ஆயில்
* ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன்ஜொஜோபா ஆயிலை 1 டேபிள் ஸ்பூன் விளக்கெண்ணெயுடன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை ஸ்கால்ப்பில் படும் படி தடவி சிறிது நேரம் நன்கு மசாஜ் செய்ய வேண்டும்.
* பின்பு தலையில் ஷவர் கேப்பை அணித்து, இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.
* மறுநாள் காலையில் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. பிப்ரவரிலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications


