Latest Updates
-
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
தலைமுடி அதிகமா கொட்டுதா? அப்ப இந்த 5 பழங்களை அதிகமா சாப்பிடுங்க..
Hair Care Tips In Tamil: உங்களுக்கு தலைமுடி அதிகமா கொட்டுதா? இந்த தலைமுடி உதிர்வை நிறுத்த எத்தனையோ தலைமுடி பராமரிப்பு பொருட்களை வாங்கி பயன்படுத்தியும் எந்த பலனும் இல்லையா? அப்படியானால் உங்கள் தலைமுடிக்கு தேவையான சத்துக்கள் கிடைப்பதில்லை என்று அர்த்தம்.

இப்படி ஒருவரது முடிக்கு போதுமான சத்துக்கள் கிடைக்காவிட்டால், எவ்வளவு பராமரிப்புக்களைக் கொடுத்தாலும் எந்த பலனும் கிடைக்காது. எனவே இந்நிலையில் உணவில் கவனத்தை செலுத்த வேண்டும். ஏனெனில் நாம் உண்ணும் உணவு நமது தலைமுடியின் ஆரோக்கியத்தில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தும்.
எனவே உங்கள் தலைமுடி பலவீனமாக இருந்தாலோ அல்லது தலைமுடி உதிர்வை அதிகம் சந்தித்தாலோ, அதற்கு தேவையான சத்துக்கள் நிறைந்த உணவுகளை தேர்ந்தெடுத்து உட்கொள்ளுங்கள். அதுவும் உங்கள் தலைமுடி உதிர்வைத் தடுக்கும் மற்றும் தலைமுடிக்கு தேவையான சத்துக்கள் நிறைந்த உணவுகள் எவையென்பது தெரியாவிட்டால், கீழே கொடுக்கப்பட்டுள்ள பழங்களை தினசரி உணவில் சேர்த்து வாருங்கள்.
1. பெர்ரி பழங்கள்
பெர்ரி பழங்களான ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி, ராஸ்ப்பெர்ரி போன்றவற்றில் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் நிறைந்துள்ளன. இவை ப்ரீ ராடிக்கல்களால் முடியின் மயிர்கால்களில் ஏற்படக்கூடிய சேதங்களைத் தடுத்து, மயிர்கால்களை வலுப்படுத்த உதவுகின்றன. எனவே முடி ஆரோக்கியத்திற்கு தினசரி உணவில் ஏதாவது ஒரு பெர்ரி பழங்களை சேர்த்து வாருங்கள்.
2. கிவி
கிவி பழம் மிகவும் பிரபலமான பழம். இந்த பழம் தலைமுடிக்கு பலவித நன்மைகளை வழங்கக்கூடியது. ஏனெனில் இதில் ஸ்கால்ப்பின் ஆரோக்கியத்திற்கு மற்றும் தலைமுடி உதிர்வைக் குறைக்க தேவையான வைட்டமின் ஈ அதிகம் உள்ளது. மேலும் இதில் உள்ள வைட்டமின் சி கொலாஜன் உற்பத்திக்கும், முடியின் வலிமைக்கும் உதவும். எனவே முடி உதிர்வை அதிகம் சந்தித்தால் தினமும் ஒரு கிவி பழத்தை சாப்பிடுங்கள்.
3. பப்பாளி
அனைத்து காலங்களிலும் விலைக் குறைவில் கிடைக்கக்கூடிய ஒரு பழம் தான் பப்பாளி. இந்த பப்பாளியில் உள்ள பாப்பைன் என்னும் நொதிப்பொருள் இறந்த செல்களை நீக்குவதோடு, முடியின் மயிர்கால்களில் ஏற்படக்கூடிய அடைப்பை போக்குவதோடு, முடியின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. அதுவும் இதில் உள்ள வைட்டமின் ஏ ஸ்கால்ப்பில் எண்ணெய் உற்பத்திக்கு உதவி புரிந்து, தலைமுடியை ஈரப்பதத்துடனும், பொலிவோடும் வைத்துக் கொள்ள உதவும். எனவே முடி உதிர்வை அதிகம் சந்திப்பவர்கள் பப்பாளியை தினசரி உணவில் சேர்த்து வாருங்கள்.
4. சிட்ரஸ் பழங்கள்
ஆரஞ்சு, எலுமிச்சை மற்றும் கிரேப்ஃபுரூட் போன்ற சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி அதிகம் உள்ளன. இது ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இதன் மூலம் மயிர்கால்களுக்கு வேண்டிய சத்துக்கள் திறம்பட கிடைத்து, முடியின் வளர்ச்சி ஊக்குவிக்கப்படும். ஆகவே எலுமிச்சை ஜூஸ், ஆரஞ்சு ஜூஸ் போன்றவற்றை உங்களின் தினசரி உணவில் சேர்த்து வாருங்கள்.
5. அவகேடோ
அவகேடோ பழத்தில் ஆரோக்கியமான கொழுப்புக்கள், வைட்டமின் ஈ, பயோடின் போன்றவை நிறைந்துள்ளன. இவை முடியின் அமைப்பை மேம்படுத்துவதோடு, முடி உடைவதைத் தடுக்கும் மற்றும் முடியின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். அதற்கு அவகேடோவை மில்க் ஷேக்காக தயாரித்து அடிக்கடி குடித்து வாருங்கள்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள பழங்கள் அனைத்தும் தலைமுடிக்கு தேவையான சத்துக்களை கொண்டவை. எனவே முடி உதிர்வு பிரச்சனையால் சிரமப்பட்டு வந்தால், மேலே கொடுக்கப்பட்டுள்ள பழங்களை தினசரி உணவில் சேர்த்து வாருங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. பிப்ரவரிலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications


