Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
தக்காளி சேக்காம ஒரு குழம்பு செய்யணுமா? அப்ப கேரளா ஸ்டைல் வாழைக்காய் குழம்பு செய்யுங்க...
Kerala Style Raw Banana Kuzhambu: தற்போது தக்காளியின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. தக்காளியின் விலை உயர்வைப் பார்க்கும் போது, அதை வாங்கி சமைக்க வேண்டுமா என்ற எண்ணம் பலருக்கும் தோன்றலாம். அதே சமயம் நிறைய பேர் தக்காளி சேர்க்காமல் சமைக்க யோசிப்பார்கள்.
நீங்களும் அப்படி யோசிக்கிறீர்களா? அப்படியானால் கேரளா ஸ்டைல் வாழைக்காய் குழம்பு செய்யுங்கள். இந்த வாழைக்காய் குழம்பிற்கு தக்காளி எதுவும் தேவையில்லை. மேலும் இது செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். அதோடு இது சாதத்துடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.

உங்களுக்கு கேரளா ஸ்டைல் வாழைக்காய் குழம்பு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கேரளா ஸ்டைல் வாழைக்காய் குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வாழைக்காய் - 2 (தோலுரித்து துண்டுகளாக்கப்பட்டது)
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* தயிர் - 1 கப்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
அரைப்பதற்கு...
* பச்சை மிளகாய் - 2
* சீரகம் - 1 டீஸ்பூன்
* துருவிய தேங்காய் - 1 கப்
தாளிப்பதற்கு...
* தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
* கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
* முதலில் குக்கரில் வாழைக்காயைப் போட்டு, அத்துடன் மஞ்சள் தூள்,
சுவைக்கேற்ப உப்பு மற்றும் 1/4 கப் நீரை ஊற்றி, குக்கரை மூடி 2 விசில்
விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து கொள்ள வேண்டும். அதே சமயம்
தயிரில், மிளகாய் தூள் சேர்த்து கலந்து அதையும் தனியாக வைத்துக் காள்ள
வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பச்சை மிளகாய்,
சீரகம், துருவிய தேங்காயைப் போட்டு, சிறிது நீரை ஊற்றி நன்கு
மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியில் அரைத்த தேங்காய் விழுது, வேக வைத்துள்ள
வாழைக்காய் மற்றும் தயிரை சேர்த்து கலந்து, அடுப்பில் வைத்து, நன்கு
கொதிக்க வைக்க வேண்டும்.
* குழம்பு நன்கு பச்சை வாசனை போக கொதித்ததும், அதை இறக்கிக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், வெந்தயம், வரமிளகாய், கறிவேப்பிலை
சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதை குழம்புடன் சேர்த்து கிளறினால், சுவையான கேரளா ஸ்டைல்
வாழைக்காய் குழம்பு தயார்.
Image Courtesy: archanaskitchen



Click it and Unblock the Notifications











