Latest Updates
-
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க.. -
கேது-சந்திரன் உருவாக்கும் கிரகண யோகம் 2026: இந்த 3 ராசிக்காரங்க கோடிகளை குவிக்கப்போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
இந்த ஒரு மூலிகை டீயை தொடர்ந்து 14 நாட்கள் குடித்தால் சிறுநீரக கல் கரையுமாம் - கூறும் ஆயுர்வேத டாக்டர்!
ருசியான... கேரளா இறைச்சி சோறு
கேரளாவில் மிகவும் பிரபலமான ஒரு ரெசிபி தான் இறைச்சி சோறு. இந்த கறி சோறானது பல்வேறு மசாலாப் பொருட்கள் சேர்த்து தயாரிக்கப்படுவதால், ஆளை சுண்டி இழுக்கும் மணத்தைக் கொண்டிருக்கும்.
கேரளாவில் மிகவும் பிரபலமான ஒரு ரெசிபி தான் இறைச்சி சோறு. இந்த கறி சோறானது பல்வேறு மசாலாப் பொருட்கள் சேர்த்து தயாரிக்கப்படுவதால், ஆளை சுண்டி இழுக்கும் மணத்தைக் கொண்டிருக்கும். கேரளாவில் இந்த இறைச்சி சோறு ரெய்தா மற்றும் அப்பளத்துடன் பரிமாறப்படும். உங்களுக்கு இந்த கேரளா ரெசிபியை உங்கள் வீட்டிலேயே செய்ய வேண்டுமா? அப்படியானால் கீழே கேரளா இறைச்சி சோறு ரெசிபியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து முயற்சி செய்து பாருங்கள்.

இந்த இறைச்சி சோற்றை மட்டனால் மட்டுமின்றி, சிக்கனைக் கொண்டும் தயாரிக்கலாம். சிக்கன் பயன்படுத்துவதாக இருந்தால், விசில் விட வேண்டிய அவசியம் இல்லை. மூடி வைத்து 15 நிமிடம் வேக வைத்தாலே போதுமானது. இப்போது மட்டனைக் கொண்டு இறைச்சி சோறு எப்படி செய்வதென்பதைக் காண்போம்.
தேவையான பொருட்கள்:
* மட்டன் - ஒரு கிலோ
* பாசுமதி அரிசி - 4 கப்
* வெங்காயம் - 3/4 கிலோ (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 4 (நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 6
* இஞ்சி பூண்டு விழுது - 3 டேபிள் ஸ்பூன்
* மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
* கரம் மசாலா - 2 டேபிள் ஸ்பூன்
* புதினா இலைகள் - 3/4 கப்
* கொத்தமல்லி இலைகள் - 3/4 கப்
* தயிர் - ஒரு கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* மல்லித் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 2 டீஸ்பூன்
* நெய் - 2 டேபிள் ஸ்பூன்
* ஏலக்காய் - 8-9
* கிராம்பு - 5
* பட்டை - ஒரு துண்டு
* அன்னாசிப்பூ - 1
* சோம்பு - 2 டீஸ்பூன்
* தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்
* தண்ணீர் - ஒரு கப் அரிசிக்கு 2 கப் தண்ணீர்
செய்முறை:
* முதலில் பாசுமதி அரிசியை நீரில் 30 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளவும். பின் மட்டனை நீரில் நன்கு கழுவிக் கொள்ளவும்.
* பின்னர் ஒரு குக்கரில் மட்டன் மற்றும் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டுக் கொள்ளவும். மிக்சர் ஜாரில் தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லி மற்றும் புதினா இலைகளைப் போட்டு கொரகொரவென்று அரைத்துக் கொள்ளவும்.
* பின்பு அரைத்ததை குக்கரில் உள்ள மட்டனுடன் சேர்க்க வேண்டும். பின் அதில் தயிரை சேர்க்கவும். அதைத் தொடர்ந்து இஞ்சி பூண்டு விழுது சேர்த்துக் கொள்ளவும்.
* பிறகு மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து, தேவையான அளவு உப்பையும் போட்டு, கையால் நன்கு பிரட்டி விட வேண்டும்.
* பின் அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி நன்கு கிளறி விடவும்.
* இப்போது குக்கரை மூடி விசில் போட்டு, அடுப்பில் வைத்து மட்டன் நன்கு வேகும் வரை 5-6 விசில் விட்டு இறக்கவும்.
* பின்பு விசில் போனதும் குக்கரைத் திறந்து மட்டன் வெந்துவிட்டதா என பார்த்து, அந்த மட்டனை தனியாக ஒரு பாத்திரத்தில் ஊற்றி வைத்துக் கொள்ள வேண்டும்.
* இப்போது ஒரு அகன்ற பிரியாணி பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடேற்றவும்.
* பின் அதில் பட்டை, ஏலக்காய், கிராம்பு, அன்னாசிப்பூ, சோம்பு சேர்த்து தாளிக்கவும். பின்னர் அதில் சிறிது மட்டனில் உள்ள கிரேவியை சேர்க்கவும்.
* பிறகு அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து, சிறிது மிளகாய் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து மூடி வைத்து கொதிக்க வைக்கவும்.
* நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் ஊற வைத்துள்ள பாசுமதி அரிசியைப் போட்டு நன்கு கிளறி விடவும்.
* அரிசியானது பாதி வெந்துள்ள நிலையில், வேக வைத்துள்ள மட்டனை சேர்த்து கிளறி, மூடி வைத்து, 15 முதல் 20 நிமிடம் குறைவான தீயில் வேக வைத்து இறக்கி, 30 நிமிடம் கழித்து பரிமாறினால், சுவையான கேரளா இறைச்சி சோறு தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications








