Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
4 முட்டையும், கீரையும் இருந்தா இந்த மாதிரி டிபன் பண்ணுங்க... டேஸ்ட் சூப்பரா இருக்கும்..எடையும் வேகமா குறையும்!
Keerai Omelette Recipe in Tamil: காலையில் தினமும் இட்லி, தோசை, சப்பாத்தி, உப்புமா என்று ஒரே மாதிரியான டிபனை சாப்பிட்டு போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான அதே சமயம் ருசியான மற்றும் சத்தான காலை உணவை சாப்பிட நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் முட்டையும், கொஞ்சம் கீரையும் இருந்தால், அவற்றைக் கொண்டு ஒரு புதுமையான காலை உணவை செய்யுங்கள்.
முட்டை என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது ஆம்லெட்தான். வழக்கமான ஆம்லெட் செய்யாமல் அதனுடன் கீரையை சேர்த்து இதுபோல ஆம்லெட் செய்து சாப்பிட்டால் சுவையானதாகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்கும். இந்த கீரை ஆம்லெட் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். கீரையை சாப்பிடாத குழந்தைகள் கூட இந்த மாதிரி ஆம்லெட் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த ஆம்லெட்டை காலை உணவாக சாப்பிடும் போது வயிறும் நிறையும், சுவையாகவும் இருக்கும்.

உங்களுக்கு சத்தான கீரை ஆம்லெட்டை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கீரை ஆம்லெட் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 4 முட்டை
- 1 கப் பொடியாக நறுக்கிய கீரை
- கால் கப் கொத்தமல்லி
- 2 பச்சை மிளகாய்
- ¼ டீஸ்பூன் பொடியாக நறுக்கிய இஞ்சி
- கால் ஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 டேபிள் ஸ்பூன் வெண்ணெய்
- 1 ஸ்பூன் மிளகுத்தூள்
- உப்பு தேவையான அளவு
செய்முறை:
- கீரை மற்றும் கொத்தமல்லி இலைகளை நிறைய தண்ணீரில் கழுவி, தண்ணீரை முழுவதுமாக வடித்து வைக்கவும்.
- பச்சை மிளகாய் மற்றும் கீரையை பொடியாக நறுக்கி வைக்கவும். இஞ்சி பயன்படுத்துவதாக இருந்தால், அதை பொடியாக துருவி வைத்துக்கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் முட்டைகளை உடைத்து ஊற்றவும். நறுக்கிய கீரை, கொத்தமல்லி இலைகள், வெங்காயம், உப்பு, இஞ்சி, மஞ்சள் தூள் மற்றும் நறுக்கிய பச்சை மிளகாயை சேர்க்கவும்.
- கலவை நுரை வரும் வரை அனைத்தையும் ஒன்றாக அடிக்கவும்.
- ஒரு தோசைக்கல்லை சூடாக்கி, மிதமான தீயில் 1 ஸ்பூன் வெண்ணெயை சேர்க்கவும். வாணலி முழுவதும் வெண்ணெய் சமமாகப் பரவும்படி நன்கு தடவவும்.
- தோசைக்கல் போதுமான அளவு சூடானதும், அடித்து வாய்த்த முட்டைக் கலவையை சமமாக ஊற்றவும்.
- கீரையை முட்டையின் மேல் பரப்பி விடவும். அடிப்பகுதி கெட்டியாகும் வரை மிதமான தீயில் சமைக்கவும்.
- ஆம்லெட்டை திருப்பிப் போட்டு, முட்டை முழுமையாக வேகும் வரை சமைக்கவும். பின்னர் மிளகுத் தூளை தூவவும்.
- அவ்வளவுதான் கீரை ஆம்லெட் தயார். இதை சூடாகப் பரிமாறவும்.



Click it and Unblock the Notifications











