Latest Updates
-
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...!
கீரை வாங்குனா பொரியல் செய்யாம இந்த மாதிரி கூட்டு செஞ்சு பாருங்க... வேற குழம்பே வேணாம்... இதுவே போதும்...!
Keerai Kootu Recipe in Tamil: ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பமாக இருக்கும். ஆரோக்கிய வாழ்க்கைக்கான தொடக்கமே நமது உணவில் இருந்துதான் தொடங்குகிறது. நம் உணவுகளில் ஆரோக்கியமான பொருட்களை சேர்த்துக் கொண்டால்தான் நம்முடைய ஒட்டுமொத்த ஆரோக்கியம் மேம்படும்.
ஆரோக்கியமான உணவுப்பொருட்கள் என்று வரும்போது எப்போதும் அந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பது கீரை வகைகள்தான். ஒவ்வொரு கீரையும் ஒரு குறிப்பிட்ட சத்துக்களை வழங்குகிறது. பொதுவாக கீரையை பொரியல் அல்லது சூப் செய்துதான் சாப்பிடுவோம். ஆனால் கீரையை குழம்பு போல வைத்து சாதத்தில் ஊற்றியே சாப்பிடலாம்.

மதிய வேளையில் உங்களால் தினமும் சாம்பார், ரசம், புளிக்குழம்பு என்று செய்ய பிடிக்கவில்லையா? ஆம் எனில் கீரையை கூட்டு செய்து சாதத்தில் ஊற்றி சாப்பிடுங்கள். இது சுவையாக இருப்பதுடன் ஆரோக்கியத்தையும் கொடுக்கும். இந்த பதிவில் சுவையான கீரை கூட்டை எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம.
தேவையான பொருள்கள்:
- பாசிப் பருப்பு - அரை கப்
- ஏதாவது ஒரு கீரை - ஒரு கட்டு
- துருவிய தேங்காய் - ஒரு மூடி
- பூண்டு - 5 பல்
- எண்ணெய் - 3 ஸ்பூன்
- கடுகு - அரை ஸ்பூன்
- உளுந்து - அரை ஸ்பூன்
- காய்ந்த மிளகாய் - 5
- பெருங்காயம் - 1 சிட்டிகை
- உப்பு - தேவையான அளவு
செய்முறை:
- பாசிப் பருப்பை நன்கு கழுவி கல் நீக்கிக் கொள்ளவும். பின்னர் பாசிப் பருப்பை சிறிது மஞ்சள் தூள், 5 பூண்டு பல், சிறிதளவு எண்ணெய் மற்றும் பெருங்காயம் சேர்த்து நன்கு வேக வைக்க வேண்டும்.
- இப்போது கீரையை பொடிப் பொடியாக நறுக்கி நன்கு மண் போகும் படி இரண்டு மூன்று முறை நன்றாகக் கழுவி சுத்தம் செய்யவும்.
- பின்னர் கீரையை ஒரு குக்கரில் கால் டம்ளர் தண்ணீர் சேர்த்து அதனுடன் உப்பும் சேர்த்து ஒரு விசில் வரும் வரை வேக வைத்து இறக்கவும்.
- பின்னர் பிரெஷர் மெதுவாக இறங்கியதும் கீரையை மெல்ல எடுத்து வேகவைத்த பருப்புடன் சேர்த்து அதனுடன் துருவிய தேங்காயையும் போட்டு நன்கு கலக்கவும்.
- அதேநேரம் ஒரு கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் அதில் கடுகு, உளுந்து, கிள்ளிய காய்ந்த மிளகாய் போன்ற இவற்றை தாளித்துக் கீரையில் சேர்த்துச் சிறிது கொதிக்கவிட்டு இறக்கவும்.
- சுவையான மற்றும் ஆரோக்கியமான கீரைக் கூட்டு தயார். இதை சைடிஷாகவும் சாப்பிடலாம் அல்லது சாதத்தில் போட்டு பிசைந்தும் சாப்பிடலாம்.
- இந்த கீரை கூட்டை எந்த கீரையில் வேண்டுமென்றாலும் செய்யலாம். குறிப்பாக முளைக்கீரை, அரைக் கீரை, சிறுகீரை, வெந்தயக் கீரை மற்றும் முருங்கைக் கீரை என எந்த வகையான கீரையில் வேண்டுமென்றாலும் செய்யலாம். இது சுவையான ஆரோக்கிய உணவாக மட்டுமின்றி ஆரோக்கியமான உணவாகவும் இருக்கும்.



Click it and Unblock the Notifications











