Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..!
4 முட்டையும், 4 கத்திரிக்காயும் இருந்தா இந்த வித்தியாசமான முட்டை தொக்கை செய்யுங்க... செம சைடிஷா இருக்கும்...!
Kathrikai Muttai Thokku Recipe in Tamil: அனைவருக்கும் பிடித்த மிகவும் ஆரோக்கியமான மற்றும் சுவையான ஒரு உணவென்றால் அது முட்டைதான். அசைவம் பிடிக்காதவர்கள் கூட முட்டையை விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்யப் போகிறீர்களா? அந்த சப்பாத்திக்கு சைடிஷ்ஷாக முட்டையை வைத்து ஒரு வித்தியாசமான தொக்கு செய்து பாருங்கள். எப்போதும் ஒரே மாதிரி தான் முட்டை தொக்கு செய்வீர்களா? அப்படியானால் இன்று சற்று வித்தியாசமாக முட்டையை கத்தரிக்காயுடன் சேர்த்து ஒரு சூப்பரான தொக்கு செய்யுங்கள்.
இந்த வித்தியாசமான முட்டை தொக்கு சப்பாத்தியுடன் மட்டுமின்றி, சாதத்துடன் பிசைந்து சாப்பிடவும் நன்றாக இருக்கும். முக்கியமாக இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு இந்த கத்திரிக்காய் முட்டை தொக்கு ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கத்திரிக்காய் முட்டை தொக்கு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- முழு கத்திரிக்காய் - 4
- வேக வைத்த முட்டை - 4
- தக்காளி விழுது - 150 கிராம்
- மிளகாய் தூள் - 3/4 ஸ்பூன்
- மல்லித்தூள் - ஒன்றரை ஸ்பூன்
- மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
- கொத்துமல்லி - ஒரு கைப்பிடி
- உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
- எண்ணெய் - 4 ஸ்பூன்
- கடுகு - 1/2 ஸ்பூன்
- மிளகு - 7
- வெந்தயம் - 1/4 ஸ்பூன்
- இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்
- பெரிய வெங்காயம் - 1
- கறிவேப்பிலை - 1 கொத்து
- பச்சை மிளகாய் - 1
செய்முறை:
- முட்டையை கழுவி ஒரு பாத்திரத்தில் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி சுமார் 10 நிமிடம் வேகவைத்து உரித்து வைத்துக் கொள்ளவும். முட்டையை உரித்து நான்கு பக்கமும் கத்தியால் லேசாக கீறி தனியே வைக்கவும்.
- அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி அதில் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு பொரிந்ததும் அதில் கறிவேப்பிலை, வெந்தயம் மற்றும் மிளகு சேர்த்து தாளிக்கவும்.
- பின்னர் நறுக்கிய பெரிய வெங்காயத்தை போட்டு கண்ணாடி பதத்திற்கு வரும் வரை தாளிக்கவும். பின்னர் நறுக்கிய பச்சை மிளகாயை சேர்க்கவும்.
- பின்னர் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- முழு கத்திரிக்காயை கழுவி அதையும் கத்தி கொண்டு நாலாபக்கமும் லேசாக கீறி, வாணலியில் தாளித்தவற்றுடன் சேர்த்து வதக்கவும்.
- கத்திரிக்காய் லேசாக வதஙகியதும் தக்காளி விழுது, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், உப்பு, மல்லித் தூள் சேர்த்து நன்கு கிளறி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து முடி போட்டு வேக விடவும்.
- மசாலா பச்சை வாசனை போய் கத்திரிக்காய் நன்கு வெந்ததும் அவித்த முட்டையையும் அதனுடன் சேர்த்து கொதிக்கவிட்டு அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்.
- இறுதியாக அதன் மீது கொத்தமல்லி தூவி இறக்கினால் கத்தரிக்காய் முட்டை தொக்கு ரெடி!
- இது சப்பாத்தியுடன் சைடிஷாக சாப்பிடவும், சாதத்தில் பிசைந்து சாப்பிடவும் அருமையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications











