Latest Updates
-
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம்
கத்திரிக்காய் கார குழம்பு
உங்களுக்கு கார குழம்பு செய்ய வராதா? ஆனால் உங்கள் வீட்டில் உள்ளோருக்கு கார குழம்பு ரொம்ப பிடிக்குமா? அப்படியானால் மிகவும் எளிய முறையில் ருசியான கத்திரிக்காய் கார குழம்பு எப்படி செய்வதென்று இன்று காண்போம்.
பலருக்கும் கார குழம்பு ரொம்ப பிடிக்கும். ஆனால் அதை மிகவும் ருசியாக மற்றும் பக்குவமாக செய்ய வராது. உங்களுக்கு கார குழம்பு செய்ய வராதா? ஆனால் உங்கள் வீட்டில் உள்ளோருக்கு கார குழம்பு ரொம்ப பிடிக்குமா? அப்படியானால் மிகவும் அற்புதமான சுவையில் மற்றும் எளிய முறையில் ருசியான கத்திரிக்காய் கார குழம்பு எப்படி செய்வதென்று இன்று தெரிந்து கொள்வோம். இந்த கார குழம்பு சாதம் மற்றும் அப்பளத்துடன் சேர்த்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும்.

இப்போது கத்திரிக்காய் கார குழம்பின் எளிய செய்முறையைக் காண்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கத்திரிக்காய் - 1/2 கிலோ
* சின்ன வெங்காயம் - 10 (தோலுரித்தது)
* புளி - 1 எலுமிச்சை அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
* சர்க்கரை - 1/2 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
* நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
கார மசாலாவிற்கு...
* பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
* தக்காளி - 2 (நறுக்கியது)
* மல்லி - 2 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 5
* தேங்காய் - 1/2 கப்
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
தாளிப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
கார மசாலா செய்வதற்கு...
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயத்தைப் போட்டு ஒரு நிமிடம் வதக்க வேண்டும்.
* பின் அதில் மல்லி மற்றும் வரமிளகாய் சேர்த்து சிறிது நேரம் வதக்கி, பின் தேங்காயை சேர்த்து 5 நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் தக்காளியை சேர்த்து நன்கு வதக்கி இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். அதேப் போல் புளியை நீரில் ஊற்றி சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
குழம்பு செய்வதற்கு...
* இப்போது ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், சின்ன வெங்காயத்தைப் போட்டு 2 நிமிடம் வதக்க வேண்டும்.
* பிறகு அதில் கத்திரிக்காயை சேர்த்து 5 நிமிடம் வதக்கி, பின் புளிச்சாற்றினை ஊற்றி நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* பின்னர் அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து கிளறி நன்கு 30 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* குழம்பு நன்கு கொதித்து, எண்ணெய் மேலே மிதக்க ஆரம்பிக்கும் போது, அதில் கொத்தமல்லியைத் தூவ வேண்டும்.
* இறுதியாக ஒரு சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு கொடுத்துள்ள எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், பெருங்காயத் தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, குழம்பில் ஊற்றி கிளறினால், சுவையான கத்திரிக்காய் கார குழம்பு தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications











