Latest Updates
-
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க.. -
Karadaiyan Nombu 2026: தேதி, சடங்குகள் மற்றும் எந்த நேரத்தில் மஞ்சள் சரடு கட்டுவது கணவரின் ஆயுளை அதிகரிக்கும்? -
Panguni Month 2026: பங்குனி மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
120 ஆண்டுக்கு பின் ஏப்ரலில் உருவாகும் திரிகிரக யோகம் 2026: இந்த 3 ராசிகளை கோடீஸ்வரராக்குவது உறுதியாம்...!
கத்திரிக்காய் பொடி கறி
நீங்கள் கத்திரிக்காய் பிரியர் என்றால், உங்களுக்கான ஒரு அருமையான கத்திரிக்காய் ரெசிபியைத் தான் கீழே கொடுத்துள்ளோம். அது தான் கத்திரிக்காய் பொடி கறி.
அனைவருக்குமே கத்திரிக்காய் பிடிக்காது. ஆனால் கத்திரிக்காயைக் கொண்டு பல சுவையான ரெசிபிக்களை செய்யலாம். மேலும் கத்திரிக்காயை வேகமாக சமைத்துவிடலாம். நீங்கள் கத்திரிக்காய் பிரியர் என்றால், உங்களுக்கான ஒரு அருமையான கத்திரிக்காய் ரெசிபியைத் தான் கீழே கொடுத்துள்ளோம். அது தான் கத்திரிக்காய் பொடி கறி. இந்த கத்திரிக்காய் பொடி கறி சாம்பார் சாதம், தயிர் சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.

உங்களுக்கு கத்திரிக்காய் பொடி கறி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கத்திரிக்காய் பொடி கறி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கத்திரிக்காய் - 10 (சிறியது)
* உப்பு - சுவைக்கேற்ப
வறுத்து அரைப்பதற்கு...
* மல்லி - 1 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* மிளகு - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 3
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
* துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து பொன்னிறமாக வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின் அவற்றை மிக்சர் ஜாரில் போட்டு நன்கு அரைத்து பொடி செய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு கத்திரிக்காயை நீரில் நன்கு கழுவி, சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அடுத்து அதில் கத்திரிக்காயைப் போட்டு, சுவைக்கேற்ப உப்பு தூவி, 90% நன்கு வெந்ததும், அதில் அரைத்த பொடியைத் தூவி நன்கு கத்திரிக்காயை வேக வைத்து இறக்கினால், சுவையான கத்திரிக்காய் பொடி கறி தயார்.
Image Courtesy: happietrio



Click it and Unblock the Notifications












