Just In
- 4 hrs ago
இன்றைய ராசிப்பலன் (26.02.2021): இன்று இந்த ராசிக்காரங்க ஆரோக்கியத்துல ரொம்ப கவனமா இருக்கணும்...
- 14 hrs ago
இந்த அறிகுறிகள் உங்க கணவன் அல்லது காதலனிடம் இருந்தால் அவர் உங்களுடன் வாழும் ஆர்வத்தை இழந்துட்டாராம்!
- 15 hrs ago
நிச்சயிக்கப்பட்ட திருமணம் செய்வது உண்மையில் நல்லதா? அதிலிருக்கும் நன்மைகள் மற்றும் ஆபத்துகள் என்ன?
- 17 hrs ago
பெண்களின் முக்கியமான முடி பிரச்சினையை குணப்படுத்த உதவும் வீட்டு வைத்தியங்கள் என்னென்ன தெரியுமா?
Don't Miss
- News
தமிழகம் முழுவதும் 2-வது நாளாக பஸ் ஸ்டிரைக்.. பொதுமக்கள் கடும் அவதி
- Automobiles
2021ல் அறிமுகமாகும் அடுத்த ஸ்கோடா கார்... புதிய தலைமுறை ஃபேபியா!! மறைப்புகளுடன் படங்கள் வெளியீடு!
- Sports
மோசம் செய்துவிட்டனர்.. நேராக ஐசிசியிடம் சென்ற இங்கிலாந்து.. திக் புகார்.. அடங்காத அகமதாபாத் சர்ச்சை!
- Movies
48வது பிறந்தநாள் காணும் கௌதம் மேனன்..குவியும் வாழ்த்து !
- Finance
Mphasis நிறுவன பங்குகள் விற்பனை.. தனி ஆளாக களத்தில் இறங்கும் கார்லைல்..!
- Education
ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கார்வார் ஸ்டைல் முந்திரி சப்ஜி
முந்திரி அதிக புரோட்டீன் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சுவையான நட்ஸ். அதோடு இது பெரும்பாலானோரின் விருப்பமான நட்ஸ் கூட. இத்தகைய முந்திரியை நீங்கள் இதுவரை பாயாசம், கேசரி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட்டிருப்பீர்கள் அல்லது உப்பு சேர்த்து வறுத்து சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால் இந்த முந்திரியைக் கொண்டு ஒரு அட்டகாசமான ஒரு சைடு டிஷ் செய்யலாம். அதுவும் கர்நாடகாவில் உள்ள மிகவும் அழகிய சுற்றுலா இடமான கார்வார் நகரில் பல ரெசிபிக்கள் மிகவும் பிரபலமானவை. அதில் ஒன்று தான் கார்வார் ஸ்டைல் முந்திரி சப்ஜி.
கீழே அந்த கார்வார் ஸ்டைல் முந்திரி சப்ஜி எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
MOST READ: சுவையான... ஹனி சில்லி பொட்டேடோ
தேவையான பொருட்கள்:
* முந்திரி - 1/2 கப்
* நற்பதமான துருவிய தேங்காய் - 3 டேபிள் ஸ்பூன்
* சர்க்கரை - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 3
* பூண்டு - 4 பற்கள் (தட்டியது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
* முதலில் முந்திரிப் பருப்பை சிறிது உப்பு சேர்த்த வெதுவெதுப்பான நீரில் போட்டு 10 நிமிடம் ஊற வைக்கவும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள கடுகு, உளுத்தம் பருப்பு, சேர்த்து தாளிக்கவும்.
* பின்பு அதில் வரமிளகாய், கறிவேப்பிலை மற்றும் பூண்டு சேர்த்து சில நொடிகள் வதக்கவும்.
* பிறகு ஊற வைத்துள்ள முந்திரி மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து 2 நிமிடங்கள் குறைவான தீயில் வைத்து வதக்கவும்.
* பின் உப்பு, சர்க்கரை மற்றும் 1.4 கப் நீரை ஊற்றி மூடி வைத்து, 5-10 நிமிடம் முந்திரி மென்மையாகும் வரை வேக வைக்கவும்.
* அடுத்து அதில் துருவிய தேங்காய் சேர்த்து, நீர் முற்றிலும் வற்றும் வரை நன்கு கிளறி, வேண்டுமானால் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து ஒரு நிமிடம் நன்கு கிளறி இறக்கினால், சுவையான கார்வார் ஸ்டைல் முந்திரி சப்ஜி தயார்.
Image Courtesy: archanaskitchen