Latest Updates
-
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்!
சப்பாத்திக்கு இந்த பக்குவத்துல கருப்பு கொண்டைக்கடலை கிரேவி செய்யுங்க.. 2 சப்பாத்தி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க..
Karuppu Kondakadalai Gravy Recipe In Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி சப்பாத்தி செய்வீர்களா? அந்த சப்பாத்திக்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று ஒவ்வொரு முறையும் யோசிப்பீர்களா? உங்கள் வீட்டில் உள்ளோருக்கு கொண்டைக்கடலை பிடிக்குமா? இதனால் அவ்வப்போது கொண்டைக்கடலையை சப்பாத்திக்கு சைடு டிஷ்ஷாக செய்வீர்களா? ஆனால் எப்போதும் ஒரே சுவையில் தான் கொண்டைக்கடலை கிரேவி செய்வீர்களா? அப்படியானால் ஒருமுறை கீழே கொடுக்கப்பட்டுள்ள பக்குவத்தில் கிரேவி செய்யுங்கள். இந்த கிரேவி சப்பாத்திக்கு மட்டுமின்றி, சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் அருமையாக இருக்கும்.

இந்த கருப்பு கொண்டைக்கடலை கிரேவி குறித்து ரேகா என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். உங்களுக்கு கருப்பு கொண்டைக்கடலை கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கருப்பு கொண்டைக்கடலை கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வேக வைப்பதற்கு...
* கருப்பு கொண்டைக்கடலை - 1 கப்
* தண்ணீர் - தேவையான அளவு
தேங்காய் விழுதிற்கு...
* துருவிய தேங்காய் - 1 கப்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* கசகசா - 1 டீஸ்பூன்
* பொட்டுக்கடலை - 1 டீஸ்பூன்
* முந்திரி - 5
* பட்டை - சிறி துண்டு
* தண்ணீர் - சிறிது
கிரேவிக்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* பட்டை - 1 துண்டு
* கிராம்பு - 2
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1 டீஸ்பூன்
* வேக வைத்த கொண்டைக்காய்
* தேங்காய் விழுது
* தண்ணீர் - 1 கப்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் இரவு முழுவதும் ஊற வைத்த கருப்பு கொண்டைக்கடலையை
குக்கரில் போட்டு, கொண்டைக்கடலை மூழ்கும் அளவில் நீரை ஊற்றி, சிறிது
உப்பு சேர்த்து குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 5 விசில் விட்டு இறக்க
வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் துருவிய தேங்காய், சோம்பு, முந்திரி, கசகசா,
பொட்டுக்கடலை, பட்டை ஆகியவற்றை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு
மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பட்டை, கிராம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி
பதத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை
வாசனை போக வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து, அத்துடன்
மஞ்சள் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு மென்மையாகும்
வரை வதக்க வேண்டும்.
* பின் அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா, சீரகத் தூள்
சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின்பு அதில் வேக வைத்த கொண்டைக்கடலையை மட்டும் சேர்த்து 1 நிமிடம்
கிளறி, பின் கொண்டைக்கடலை வேக வைத்த நீரை ஊற்றி கிளறி கொதி வந்ததும்,
அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து, 1 கப் நீரை ஊற்றி,
கறிவேப்பிலையை சேர்த்து குக்கரை மூடி, 2 விசில் விட்டு இறக்க
வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, கொத்தமல்லியைத் தூவி கிளறினால்,
சுவையான கருப்பு கொண்டைக்கடலை கிரேவி தயார்.



Click it and Unblock the Notifications