Latest Updates
-
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும்
சப்பாத்திக்கு ஒருடைம் முட்டைக்கோஸ் பச்சை குருமா செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்..
Cabbage Green Kurma Recipe In Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி சப்பாத்தி செய்வீர்களா? அந்த சப்பாத்திக்கு எப்போதும் ஒரே மாதிரியான சைடு டிஷ் தான் செய்வீர்களா? உங்கள் வீட்டில் உள்ளோருக்கு சற்று வித்தியாசமான சுவையுடைய சைடு டிஷ் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா?

உங்கள் வீட்டில் முட்டைக்கோஸ் உள்ளதா? அப்படியானால் அந்த முட்டைக்கோஸ் கொண்டு பச்சை குருமா செய்து கொடுங்கள். இந்த குருமா சப்பாத்திக்கு மட்டுமின்றி, தோசை, சாதத்துடன் சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். முக்கியமாக இந்த சுவையில் குருமா செய்தால், வீட்டில் உள்ளோர் வழக்கமாக சாப்பிடுவதை விட அதிகமாக சாப்பிடுவார்கள்.
இந்த முட்டைக்கோஸ் பச்சை குருமா ரெசிபி குறித்து ரேகா என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். உங்களுக்கு முட்டைக்கோஸ் பச்சை குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முட்டைக்கோஸ் பச்சை குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
மசாலா அரைப்பதற்கு...
* தேங்காய் - 1/2 கப்
* வறுத்த வேர்க்கடலை - 1/4 கப்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* பட்டை - 1 துண்டு
* கிராம்பு - 3-4
* அன்னாசிப்பூ - 1
* கல்பாசி - 1
* கசகசா - 1 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 2
* புதினா - 1 கைப்பிடி
* கொத்தமல்லி - 1 கைப்பிடி
குருமாவிற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* முட்டைக்கோஸ் - 1 கப் (துருவியது)
* தண்ணீர் - 1 1/2 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது
மசாலா பொடிகள்...
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் தேங்காய், வேர்க்கடலை, சோம்பு, பட்டை,
கிராம்பு, அன்னாசிப்பூ, கல்பாசி, கசகசா, பச்சை மிளகாய், புதினா,
கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், சீரகத்தை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, சிறிது
உப்பை நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து, சிறிது உப்பை
தூவி நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் மசாலா பொடிகளான மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்
தூள், சீரகத் தூள், கரம் மசாலா ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறி விட
வேண்டும்.
* பின்பு அதில் துருவிய முட்டைக்கோஸை சேர்த்து, 2 நிமிடம் வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்த மசாலாவை சேர்த்து கிளறி, 1 1/2 கப் நீரை ஊற்றி
கலந்து 2 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, சிறிது கொத்தமல்லியைத் தூவி
கிளறினால், சுவையான முட்டைக்கோஸ் பச்சை குருமா தயார்.



Click it and Unblock the Notifications
