Latest Updates
-
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
நேபாளி ஸ்டைல் சிக்கன் சுகௌனி - 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க..
Nepali Style Chicken Chukauni Recipe In Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி சப்பாத்தி, பூரி செய்வீர்களா? அதுவும் விடுமுறை நாட்கள் வந்தாலே, அப்போது சப்பாத்தி அல்லது பூரி செய்து, அதற்கு சைடு டிஷ்ஷாக பலர் சிக்கனை செய்து சாப்பிடுவார்கள். உங்கள் வீட்டிலும் அப்படி தானா?

அப்படியென்றால் அடுத்தமுறை சப்பாத்தி அல்லது பூரிக்கு சைடு டிஷ்ஷாக சிக்கனை செய்வதாக இருந்தால், வழக்கமாக செய்வது போன்று சிக்கன் கிரேவி அல்லது சிக்கன் மசாலாவை செய்யாமல், ஒருமுறை நேபாளி ஸ்டைல் சிக்கன் சுகௌனியை செய்யுங்கள். இது வேற லெவல் சுவையில் இருக்கும். முக்கியமாக இந்த சைடு டிஷ் செய்யும் போது, வீட்டில் உள்ளோர் வழக்கமாக சாப்பிடுவதை விட அதிகமாக சாப்பிடுவார்கள்.
இந்த நேபாளி ஸ்டைல் சிக்கன் சுகௌனி குறித்து வேம்பு கார்த்திக் என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். உங்களுக்கு நேபாளி ஸ்டைல் சிக்கன் சுகௌனி ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சிக்கன் சுகௌனி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
ஊற வைப்பதற்கு...
* சிக்கன் - 1/4 கிலோ
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - 1/2 டீஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் - 1 (நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது
* தயிர் - 5 டேபிள் ஸ்பூன்
* பூண்டு - 3 பல் (பொடியாக நறுக்கியது)
* உப்பு - 1/4 டீஸ்பூன்
* சர்க்கரை - 1/4 டீஸ்பூன்
தாளிப்பதற்கு..
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* கசூரி மெத்தி - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் சிக்கனை கழுவி எடுத்துக் கொண்டு,
அத்துடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மிளகுத் தூள், 1/2 டீஸ்பூன்
உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு
பிரட்டிக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு பேனை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து நன்கு ப்ரை
செய்து, ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ப்ரை செய்த சிக்கனுடன் நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிய
வெங்காயம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், சிறிது கொத்தமல்லியை
சேர்க்க வேண்டும்.
* அதன் பின் ஒரு கிண்ணத்தில் தயிரை எடுத்து, அத்துடன் பொடியாக
நறுக்கிய பூண்டு, 1/4 டீஸ்பூன் உப்பு மற்றும் 1/4 டீஸ்பூன் சர்க்கரை
சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* அடுத்து அந்த தயிரை சிக்கனுடன் சேர்த்து நன்கு கலந்து விட
வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் கசூரி
மெத்தியை சேர்த்து மிதமான தீயில் வைத்து கிளறி இறக்கி, சிக்கனுடன்
சேர்த்து கிளறினால், சுவையான நேபாளி ஸ்டைல் சிக்கன் சுகௌனி தயார்.



Click it and Unblock the Notifications
