Latest Updates
-
இன்றைய ராசிபலன் 09 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம்...! -
கும்ப ராசியில் உதயமாகும் புதன்: மார்ச் 14 முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்... -
எவ்வளவு வயசானாலும் இளமையா காட்சியளிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
காலிஃப்ளவரும், பட்டாணியும் இருந்தா.. இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி வேற லெவல்-ல இருக்கும்.. -
குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்..
தினமும் வெறும் டீ போடாம.. ஒருடைம் இந்த கற்பூரவள்ளி மசாலா டீ போட்டு குடிங்க.. இதமா இருக்கும்...
Karpooravalli Masala Tea Recipe In Tamil: தற்போது ஆங்காங்கே மழை பெய்து, காலநிலை மிகவும் குளிர்ச்சியாக உள்ளது. இதனால் சளி, இருமல், ஜலதோஷம் போன்றவற்றால் நிறைய பேர் அவதிப்படுவதுண்டு. இந்நிலையில் நன்கு சூடாகவும், தொண்டைக்கு இதமாகவும் இருக்கும் வகையில் ஒரு மசாலா டீ குடித்தால் நன்றாக இருக்கும்.
பொதுவாக மசாலா டீ என்றால் ஏலக்காய், இஞ்சி ஆகியவற்றை மட்டும் தான் பயன்படுத்துவார்கள். ஆனால் சளி, இருமலில் இருந்து விடுவிக்க உதவும் கற்பூரவள்ளி கொண்டும் டீ போடலாம் என்பது தெரியுமா? ஆம், இந்த இலைகளைக் கொண்டு போடப்படும் டீ மிகவும் சுவையாக இருப்பதோடு, இதமாகவும் இருக்கும்.

உங்களுக்கு கற்பூரவள்ளி மசாலா டீயை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கற்பூரவள்ளி மசாலா டீ ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கற்பூரவள்ளி இலைகள் - 8
* ஏலக்காய் - 2
* மிளகு - 10
* இஞ்சி - 2 துண்டு
* பால் - 1 டம்ளர்
* தண்ணீர் - 1 1/2 டம்ளர்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* டீத்தூள் - 2 டீஸ்பூன்
* சர்க்கரை - 4 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் கற்பூரவள்ளி இலைகளை நீரில் நன்கு கழுவிக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் இடிக்கும் உரலில் ஏலக்காய், மிளகு சேர்த்து நன்கு
பொடித்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் இஞ்சியை சேர்த்து நன்கு தட்டிக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் பாலை ஊற்றி, அதில் 1 1/2
டம்ளர் நீரை ஊற்றிக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் கற்பூரவள்ளி இலைகளை பிய்த்து போட வேண்டும்.
* பிறகு அதில் மஞ்சள் தூள் சேர்த்து அடுப்பில் வைக்க வேண்டும்.
* பின் அதில் டீத்தூளை சேர்த்து, தட்டி வைத்துள்ள மசாலா பொருட்களை
சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* டீ நன்கு பொங்கி வந்த பின், மிதமான தீயில் வைத்து 5 நிமிடம் டீயை
கொதிக்க வைக்க வேண்டும்.
* 5 நிமிடம் நன்கு கொதித்த பின், மீண்டும் தீயை அதிகரித்து ஒருமுறை
பொங்கி வந்ததும், அதில் சர்க்கரை சேர்த்து கிளறி இறக்கி வடிகட்டினால்,
சுவையான கற்பூரவள்ளி மசாலா டீ தயார்.
Image Courtesy: Today's Samayal



Click it and Unblock the Notifications











