Latest Updates
-
இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்குமாம்...! -
வார ராசிபலன் (01 March 2026-07 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும்! -
மட்டன் வாங்குனா இந்த மாதிரி நெல்லூர் ஸ்டைலில் குழம்பு வைச்சு பாருங்க... தோசை, சாதத்துக்கு சூப்பரா இருக்கும்... -
திரிகிரக யோகம் கும்ப ராசியில் உருவாவதால் இந்த 3 ராசிக்காரர்களை தோல்வியும், துரதிர்ஷ்டமும் துரத்தப்போகுதாம்...! -
1 கப் கோதுமை ரவா இருந்தா இந்த மாதிரி அடை செஞ்சு பாருங்க... சூப்பரான காலை உணவா இருக்கும்... ட்ரை பண்ணுங்க...! -
இந்தியாவின் முதல் பெண்களுக்கான பள்ளி எப்போது திறக்கப்பட்டது? எந்த ஊரில் திறக்கப்பட்டது தெரியுமா? -
உருளைக்கிழங்கை ஒருதடவை இந்த மாதிரி கொங்குநாடு ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க...டக்கரான சைடிஷா இருக்கும்...! -
அமெரிக்க-ஈரான் போரால் துபாயில் சரசரவென குறையும் தங்கம் விலை...இந்தியாவிலும் தங்கம் விலை குறையுமா? உண்மை என்ன? -
இந்த 4 ராசிக்காரங்க உயிரை கொடுத்தாவது குடும்பத்தை பாதுகாக்கும் ரியல் ஹீரோவாக இருப்பார்களாம்...உங்க ராசி என்ன? -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. தொப்பையும், உடல் எடையும் இருமடங்கு வேகத்துல குறையும்..
கேரட்டை இந்த பக்குவத்தில் கர்நாடகா ஸ்டைலில் பொரியல் செய்யுங்க... பிடிக்காதவங்க கூட ஆசையா சாப்பிடுவாங்க...!
Karnataka Style Carrot Fry Recipe in Tamil: உங்கள் வீட்டில் உள்ளோர் தினமும் பொரியல் கேட்பார்களா? ஆனால் சில காய்கறிகளில் பொரியல் செய்தால் வேண்டாம் என்பார்களா? முக்கியமாக கேரட் பொரியல் என்றால் வேண்டாம் என்று கூறுவார்களா? அப்படிப்பட்டவர்களை கேரட் சாப்பிட வைக்க வேண்டுமா?
அப்படியானால் அந்த கேரட்டை வைத்து கர்நாடகா ஸ்டைலில் கீழே கொடுக்கப்பட்டுள்ள பக்குவத்தில் பொரியல் செய்து கொடுங்கள். இப்படி கேரட் பொரியலை செய்யும் போது, கேரட் பிடிக்காதவர்கள் கூட கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள். முக்கியமாக கேரட் சாப்பிடாத குழந்தைகள் கூட இதை விரும்பி சாப்பிடுவார்கள். ஏனெனில் சிறிதளவு சர்க்கரை சேர்க்கப்படுவதால் அதன் சுவை குழந்தைகளுக்கும் பிடித்தது போல இருக்கும். இந்த கேரட் பொரியலை பேச்சுலர்கள் கூட செய்து சாப்பிடலாம். அந்த அளவிற்கு இது செய்வதற்கும் ஈஸியானது கூட.

உங்களுக்கு சுவையான கர்நாடகா ஸ்டைல் கேரட் பொரியலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கர்நாடகா ஸ்டைல் கேரட் பொரியல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- கேரட் - 4, துருவியது
- பெரிய வெங்காயம் - 1
- பச்சை மிளகாய் - 2
- கறிவேப்பிலை - ஒரு கொத்து
- துருவிய தேங்காய் - 1/2 கப்
- மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- சர்க்கரை - ஒரு சிட்டிகை
- தண்ணீர் - கால் கப்
தாளிக்க:
- சமையல் எண்ணெய் - 2 ஸ்பூன்
- கடுகு - 1/2 ஸ்பூன்
- உளுந்து - 1 ஸ்பூன்
- கடலைப்பருப்பு - 1 ஸ்பூன்
- சீரகம் - 1/4 ஸ்பூன்
- பெருங்காயம் - ஒரு சிட்டிகை
- கொத்தமல்லி இலைகள் - சிறிதளவு
செய்முறை:
- முதலில் கேரட்டை நன்றாக கழுவி, தோல் சீவி, துருவி தனியாக வைக்கவும். அதேபோல தேங்காயைத் துருவி வைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி சூடாக்கவும், எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு தாளிக்கவும்.
- கடுகு வெடித்ததும் உளுந்து, கடலைப்பருப்பு மற்றும் சீரகம் சேர்த்து தாளிக்கவும்.
- பின்னர் பெருங்காயத்தை சேர்க்கவும்.
- பின்னர் நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்கவும்.
- அதன் பின் நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். அதைத்தொடர்ந்து மஞ்சள் தூள் மற்றும் சர்க்கரையை சேர்த்து நன்கு கிளறவும்.
- பின்னர் துருவிய கேரட்டை சேர்த்து வதக்கவும்.
- கேரட் மென்மையாகி வேகும் வரை மிதமான தீயில் வதக்கவும்.
- தேவைப்பட்டால் மூடி வைத்து குறைந்த தீயில் சமைக்கவும்.
- இறுதியாக துருவிய தேங்காயைச் சேர்க்கவும். பின்னர் கொத்தமல்லி இலை தூவி அலங்கரித்து சாதம் அல்லது சப்பாத்தியுடன் பரிமாறவும்.



Click it and Unblock the Notifications











