Latest Updates
-
இந்தியாவில் முதலில் தொடங்கப்பட்ட வங்கி எது? அது தமிழ்நாட்டில் எந்த ஊரில் அந்த வங்கி தொடங்கப்பட்டது தெரியுமா? -
கோடையில் தினமும் ராகி ரொட்டி சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
சிங்கம் போல வலிமையும், தைரியமும் கொண்ட 4 பெண் ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
18 மாதம் கழித்து மீனம் செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது.. -
தேங்காய் தோசையும்.. தேங்காய் சட்னியும்.. - இந்த காம்போவை எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 13 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சொந்த காசுல சூனியம் வைச்சுக்கப் போறாங்களாம்...! -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரங்க லட்சங்களை குவிக்கப் போறாங்களாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க...
சுடசுட இட்லிக்கு காரைக்குடி மிளகாய் சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க...
Karaikudi Milagai Chutney Recipe In Tamil: உங்கள் வீட்டில் பெரும்பாலும் காலையில் இட்லி தான் காலை உணவாக இருக்குமா? அப்படியானால் அந்த இட்லிக்கு சற்று புளிப்பாக அல்லது காரமாக சட்னி இருந்தால் தான், அந்த இட்லி உள்ளே இறங்கும். உங்களுக்கு வழக்கமாக செய்யும் தக்காளி சட்னி அல்லது கார சட்னியை சாப்பிட்டு போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான இதுவரை நீங்கள் சுவைத்திராத ஒரு சட்னியை செய்ய நினைக்கிறீர்களா?
அப்படியானால் ஒருமுறை காரைக்குடி மிளகாய் சட்னியை செய்யுங்கள். இந்த சட்னி காரம், புளிப்பு, இனிப்பு என அனைத்தும் கலந்து வேற லெவலில் இருக்கும். முக்கியமாக இந்த சட்னி செய்வதற்கு ஈஸியாக இருக்கும். ஒருமுறை செய்தால், அடிக்கடி செய்ய சொல்லிக் கேட்பார்கள். பேச்சுலர்கள் கூட இந்த சட்னியை ட்ரை செய்யலாம். அந்த அளவில் சுலபமாக இருக்கும்.

உங்களுக்கு காரைக்குடி மிளகாய் சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே காரைக்குடி மிளகாய் சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வரமிளகாய் - 20
* சின்ன வெங்காயம் - 15
* பூண்டு - 7 பல்
* உப்பு - சுவைக்கேற்ப
* புளி - 1 எலுமிச்சை அளவு
* நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* வெல்லம் - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் வரமிளகாய் மற்றும் புளியை சுடுநீரில் 5 நிமிடம் ஊற வைக்க
வேண்டும்.
* 5 நிமிடம் கழித்து, மிக்சர் ஜாரில் வரமிளகாய், புளி, சின்ன
வெங்காயம், பூண்டு பற்கள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு
மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் அரைத்து வைத்துள்ளதை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி கலந்து
விட வேண்டும்.
* பின்பு அதில் வெல்லத்தை சேர்த்து கிளறி, குறைவான தீயில் வைத்து,
எண்ணெய் பிரியும் வரை சட்னியை கொதிக்க வைத்து இறக்கி, 2 டேபிள் ஸ்பூன்
நல்லெண்ணெய் ஊற்றி கலந்தால், சுவையான காரைக்குடி மிளகாய் சட்னி
தயார்.



Click it and Unblock the Notifications











