Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
சிக்கனை இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் சமைச்சு பாருங்க... தோசை, சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும்...!
Karaikudi Chicken Masala Recipe in Tamil: வகை வகையாய் சிக்கன் வைத்து சமைத்தாலும் அதில் சேர்க்கப்படும் பொருட்களுக்கு ஏற்ப அதன் சுவையை மாற்றி கொள்ளும். ஒவ்வொரு ஊரிலும் சேர்க்கப்படும் பொருட்களை வைத்து தான் சுவையில் மாற்றம் ஏற்படுகிறது. அந்த வரிசையில் காரைக்குடி செட்டிநாடு உணவுகளுக்கு என்று தனி விருப்பம் உண்டு. சரி வாங்க காரைக்குடி சிக்கன் எப்படி செய்வது என இங்கு பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:
- சிக்கன் - ½ கிலோ
- பெரிய வெங்காயம் - 1
- தக்காளி - 2
- கருவேப்பிலை - 2 கொத்து
- சோம்பு - ¼ தேக்கரண்டி
- சாம்பார் தூள் - ½ டீ ஸ்பூன்
- மிளகாய் - 1 டீ ஸ்பூன்
- மல்லித்தூள் - 1 டீ ஸ்பூன்
- பச்சை மிளகாய் - 1
- இஞ்சி, பூண்டு விழுது - 2 டீ ஸ்பூன்
- மஞ்சள் தூள் - ¼ டீ ஸ்பூன்
- எண்ணெய் - தேவையான அளவு
- உப்பு - தேவையான அளவு
- கொத்தமல்லி - சிறிதளவு
அரைக்க:
- மிளகு - 1 தேக்கரண்டி
- சீரகம் - 1 தேக்கரண்டி
- காய்ந்த மிளகாய் - 6
- தனியா - 4 தேக்கரண்டி
- பட்டை - ஒரு துண்டு
- கிராம்பு - 5
- ஏலக்காய் - 4
- மராத்தி மொக்கு - சிறிது
- ஜாதிக்காய் - கால் பாகம்
- கருவேப்பிலை - 8 கொத்து
- தேங்காய் துருவல் - 4 மேசைக்கரண்டி
செய்முறை:
- சிக்கன் துண்டுகளை மஞ்சள் தூள் மற்றும் கல் உப்பு சேர்த்து
நன்றாக அலசி எடுத்து கொள்ளவும்.
- அதனுடன் சிறிதளவு மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது, மற்றும் உப்பு
சேர்த்து நன்றாக பிரட்டி ஊற விடவும்.
- வெங்காயத்தை தோல் உரித்து கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- அதே போல் தக்காளியையும் கழுவி பொடிப்பொடியாக நறுக்கி வைக்கவும்.
- வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்த்து காய
விடவும்.
- பின் அதில் மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், தனியா, பட்டை,
கிராம்பு, ஏலக்காய், மராத்தி மொக்கு, மற்றும் ஜாதிக்காய் சேர்த்து
சிவந்து மணம் வரும் வரை வதக்கவும்.
- பின் அதில் கருவேப்பிலை மற்றும் தேங்காய் சேர்த்து அடுப்பை அணைத்து
ஆற விடவும்.
- அதை மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக அரைத்து பின் தேவையான அளவு
தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.
- வாணலியில் எண்ணெய் சேர்த்து சூடானதும் சோம்பு மற்றும் கருவேப்பிலை
சேர்த்து தாளித்து கொள்ளவும்.
- பின் அதில் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நிறம் மாறும்
வரை வதக்கி கொள்ளவும்.
- அதில் சாம்பார் தூள், மிளகாய், மற்றும் மல்லித்தூள் சேர்த்து கிளறி
எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்.
- அதனுடன் ஊற வைத்த சிக்கன் துண்டுகளை சேர்த்து கிளறி மூடி வேக
வைக்கவும்.
- தண்ணீர் சேர்க்க தேவையில்லை. சிக்கனிலிருந்து வரும் தண்ணீரே
போதுமானதாக இருக்கும்.
- சிக்கன் அரைப்பதம் வெந்ததும் அரைத்து வைத்த மசாலா மற்றும் தேவையான
அளவு உப்பு சேர்த்து பச்சை வாசம் போகும் வரை நன்கு
கொதிக்கவிடவும்.
- கடைசியாக கொத்தமல்லி மற்றும் கருவேப்பிலை சேர்த்து இறக்கினால்
சுவையான காரைக்குடி சிக்கன் ரெடி!



Click it and Unblock the Notifications











