Latest Updates
-
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11மார்ச் இதே நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்..
காலையில் இட்லி, தோசை செஞ்சு போரடிச்சுடுச்சா? அப்ப காலையில 10 நிமிஷத்துல இந்த டிபன் செய்யுங்க..
Kambu Roti Recipe In Tamil: பெரும்பாலும் காலையில் உங்கள் வீட்டில் இட்லி, தோசை தான் செய்வீர்களா? இதை தினமும் சாப்பிட்டு போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான அதே சமயம் 10 நிமிடத்தில் செய்யக்கூடிய வகையில் ஒரு டிபனை செய்ய நினைக்கிறீர்களா?
உங்கள் வீட்டில் கம்பு மாவு உள்ளதா? அப்படியானால் அந்த கம்பு மாவு கொண்டு ரொட்டி செய்யுங்கள். இந்த கம்பு ரொட்டி செய்வதற்கு சுலபமாக இருப்பதோடு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். இந்த கம்பு ரொட்டி மிகவும் ஆரோக்கியமான காலை உணவு.

உங்களுக்கு கம்பு ரொட்டியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கம்பு ரொட்டி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கம்பு மாவு - 1 கப்
* கோதுமை மாவு - 1/4 கப்
* கறிவேப்பிலை - சிறிது (பொடியாக நறுக்கியது)
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* வறுத்த வேர்க்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
* தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
அரைப்பதற்கு...
* இஞ்சி - சிறு துண்டு
* பச்சை மிளகாய் - 2
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1/2 கப்
* கொத்தமல்லி - 1/2 கப
* தண்ணீர் - சிறிது
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் இஞ்சி, பச்சை மிளகாய், சீரகம், சோம்பு,
கறிவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் அரைத்ததை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதில் கம்பு மாவு, கோதுமை மாவு ஆகியவற்றை சேர்க்க
வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, சுவைக்கேற்ப
உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அதில் பொடியாக நறுக்கிய தேங்காய், வறுத்த வேர்க்கடலை
மற்றும் பிரஷ்ஷான தயிரை சேர்த்து, நன்கு மென்மையாக பிசைந்து கொள்ள
வேண்டும்.
* பின் பிசைந்த மாவை சிறிது எடுத்து, ஒரு இலை அல்லது கவரில் வைத்து
தட்டையாக தட்டிக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு தவாவை அடுப்பில் வைத்து, தவா சூடானதும், தட்டி
வைத்துள்ளதை சேர்த்து, எண்ணெய் ஊற்றி முன்னும் பின்னும் வேக வைத்து
எடுத்தால், சுவையான கம்பு ரொட்டி தயார்.
Image Courtesy: Akshaya. com



Click it and Unblock the Notifications





