Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க..
தோசை மாவுடன் இந்த பொருளை அரை கப் சேர்த்து தோசை சுட்டால் எடை குறைவதுடன், எலும்பும் இரும்பாகுமாம்...!
Kambu Dosa Recipe in Tamil: பெரும்பாலான இந்தியர்களால் குறிப்பாக தென்னிந்தியர்களால் தோசை இல்லாமல் வாழவே முடியாது. தினமும் காலை அல்லது மாலை ஒரு முறையாவது தோசை சாப்பிடுவது நமது வழக்கமாக மாறிவிட்டது. அரிசி மாவு தோசை சாப்பிடுவது சுவையானதாக இருந்தாலும் அதனால் பெரிய அளவில் எந்த நன்மைகளும் கிடைப்பதில்லை.
இந்நிலையில் தோசையை ஆரோக்கியமான உணவாக மாற்ற அதனுடன் சில தானியங்களை சேர்த்து தோசை சுடுவது சுவையுடன் ஆரோக்கியத்தையும் கொடுக்கும். அந்த வகையில் தோசை மாவில் கம்பு மாவை சேர்த்து கம்பு தோசையாக மாற்றி சாப்பிடுவது ஆரோக்கியமான தேர்வாக இருக்கும். இந்த கம்பு தோசை எடையைக் குறைப்பது, எலும்புகளை வலுப்படுத்துவது போன்ற பல நன்மைகளை அளிக்கிறது. இந்த பதிவில் கம்பு தோசையை எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

தேவையானப் பொருட்கள்:
- கம்பு மாவு - அரை கப்
- தோசை மாவு - 1 கப்
- பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 2
- நறுக்கிய கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி
- நறுக்கிய பச்சை மிளகாய் - 1
- துருவிய இஞ்சி - 1 ஸ்பூன்
- நெய் - தேவையான அளவு
- உப்பு - தேவையான அளவு
- தண்ணீர் - கால் கப்
செய்முறை:
- நன்கு புளித்த தோசை மாவில் அரை கப் கம்பு மாவை கலக்கவும்.
- தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும்.
- மாவு நல்ல பதத்திற்கு வந்ததும் அதில் நறுக்கிய வெங்காயம், இஞ்சி,
பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு கலக்கவும்.
- மாவில் எந்த கட்டிகளும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
தோசைக்கல்லில் மாவை ஊற்றினால் முழுவதும் பரவும் பதத்தில் இருக்க
வேண்டும்.
- தோசைக்கல்லை அடுப்பில் வைத்து கல் நன்கு சூடானதும் அதில் ஒரு ஸ்பூன்
நெய்யை ஊற்றவும்.
- நெய்யை முழுவதும் பரப்பிவிட்டு அதில் ஒரு கரண்டி மாவை ரவா தோசை போல
மெலிதாக ஊற்றவும்.
- அதன்பின் தோசையை மூடிவைத்து வேகவிடவும்.
- நன்கு முறுகலாக வெந்ததும் தோசையை தட்டிற்கு மாற்றவும்.
- இந்த சுவையான மற்றும் ஆரோக்கியமான கம்பு தோசைக்கு தேங்காய் சட்னி
மற்றும் கார சட்னி சூப்பரான சைடிஷாக இருக்கும்.
குறிப்புகள்:
- கம்பு மாவிற்குப் பதில் கேழ்வரகு, தினை போன்ற எந்த வகையான
மாவையும் சேர்த்துக் கொள்ளலாம்.
- தோசைக்கல் மிகவும் சூடாக இருக்க வேண்டியது முக்கியம். நீங்கள்
ஊற்றும்போது, சிறிய துளைகளுடன் மாவு தானாக பரவுவது போல இருக்க
வேண்டும், அது மாவின் சரியான நிலைத்தன்மையும், தோசை தயாரிக்க
தோசைக்கல் சரியாக பதத்தில் இருக்கிறது என்பதைக் காட்டுகிறது.
- இந்த தோசையை திருப்பி போடா வேண்டிய அவசியமில்லை. மூடிவைத்து வேக
வைத்தாலே போதும்.



Click it and Unblock the Notifications





