எடையை வேகமாக குறைக்க உதவும் கம்பு தயிர் சாதம் ரெசிபி... ட்ரை பண்ணி பாருங்க... சீக்கிரம் ஒல்லியாகிருவீங்க...!

Posted By:

Kambu Curd Rice Recipe in Tamil: கொளுத்தும் கோடை காலம் இதோ வந்துவிட்டது, வெயில் நம்மை ஒரு காட்டு காட்ட துவங்கிவிட்டது. கோடை காலம் என்றதும் நாமும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிப்போம். சரும பராமரிப்பு, உடலின் ஈரப்பதத்தை தக்க வைக்க பராமரிப்பு என பலவற்றை முயற்சிப்போம். அதிலும் குறிப்பாக உணவு வகைகளில் சில பொருட்களை கூட்டி குறைத்து கொள்வோம்.

வெயிலுக்கு ஏற்ப பழங்கள், இளநீர் மற்றும் மோர் போன்றவற்றை அதிகம் சேர்த்து கொள்வோம். இந்த வரிசையில் சிறந்த சிறுதானிய உணவு பொருள் கம்பிற்கு தனி இடம் உண்டு. இங்கு கம்பை வைத்து எப்படி எளிதாக தயிர் சாதம் செய்வது என பார்க்கலாம். இந்த கம்பு தயிர் சாதம் சுவையானது மட்டுமல்ல ஆரோக்கியமானதும் கூட. எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு இது சிறந்த சுவையான விருப்பமாக இருக்கும்.

Kambu Curd Rice Recipe How to Prepare Kambu Curd Rice

தேவையான பொருட்கள்:

- கம்பு - 1 கப்
- பால் - 1 ½ கப்
- தயிர் - ½ கப்
- கேரட் - 1
- கடுகு - சிறிதளவு
- உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
- கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
- பச்சை மிளகாய் - 1
- காய்ந்த மிளகாய் - 2
- இஞ்சி - 1 துண்டு
- பெருங்காயம் - சிறிதளவு
- எண்ணெய் - தேவையான அளவு
- உப்பு - தேவையான அளவு

Take a Poll

செய்முறை :

- முதலில் கம்பை புடைத்து சுத்தம் செய்து தோலை பகுதியை நீக்கி கொள்ளவும்.

- தோல் நீக்கி சுத்தம் செய்த கம்பை மிக்ஸில் போட்டு பொடியாக ரவை பதத்திற்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

- பாலை காய் காய்ச்சி ஆற வைக்கவும்.

- கொத்தமல்லி மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைக்கவும்.

- இஞ்சியை மண் போக சுத்தமாக அலசி தோல் நீக்கி பொடியாக நறுக்கவும்.

- கேரட்டை தோலை சுரண்டி துருவி எடுத்து கொள்ளவும்.

- குக்கரை அடுப்பில் வைத்து ஐந்து கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

- தண்ணீர் கொதித்ததும் அதனுடன் கம்பை சேர்த்து கிளறி குக்கரை மூடவும்.

- குக்கர் இருக்கும் அடுப்பை மிதமான தீயில் வைத்து வேக வைக்கவும்.

- 4 விசில் வந்ததும் இறக்கி விசில் அடங்கும் வரை விடவும்.

- பின் குக்கரை திறந்து அதனுடன் காய்ச்சிய பால் சேர்த்து நன்றாகக் கிளறவும்.

- வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்க்கவும்.

- எண்ணெய் காய்ந்ததும் அதனுடன் கடுகு சேர்த்து பொரிய விடவும்.

- அதில் கடலைப்பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்கவும்.

- பின் அதில் கருவேப்பிலை, இஞ்சி மற்றும் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும்.

- கடைசியாக அடுப்பை அணைத்ததும் சிறிதளவு பெருங்காயத்தை சேர்த்து கிளறவும்.

- பின் அதை கம்பு சாதத்துடன் சேர்த்து கொள்ளவும். அதனுடன் தயிர் மற்றும் துருவிய கேரட்டை சேர்க்கவும்.

- கடைசியாக தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து விடவும்.

- பின் பொடியாக நறுக்கி வைத்த கொத்தமல்லி இலைகளை சேர்த்து கிளறினால் சுவையான கம்பு தயிர் சாதம் ரெடி!

[ of 5 - Users]
Desktop Bottom Promotion