Latest Updates
-
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க.. -
Karadaiyan Nombu 2026: தேதி, சடங்குகள் மற்றும் எந்த நேரத்தில் மஞ்சள் சரடு கட்டுவது கணவரின் ஆயுளை அதிகரிக்கும்? -
Panguni Month 2026: பங்குனி மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
120 ஆண்டுக்கு பின் ஏப்ரலில் உருவாகும் திரிகிரக யோகம் 2026: இந்த 3 ராசிகளை கோடீஸ்வரராக்குவது உறுதியாம்...! -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய தக்காளி வெங்காய பச்சடி - சூடான சாதத்துக்கு டக்கரா இருக்கும்.. ட்ரை பண்ணுங்க..
ஹோட்டலில் புதினா சட்னி டேஸ்ட்டா இருப்பதன் ரகசியம் இதாங்க.. தெரிஞ்சுகிட்டு நீங்களும் ட்ரை பண்ணுங்க...
Hotel Style Pudina Chutney Recipe In Tamil: தற்போது அடிக்கும் வெயிலுக்கு உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளும் உணவுகளை தினசரி சமையலில் சேர்க்க வேண்டிய நிலையில் உள்ளோம். அப்படி உடல் சூட்டைக் குறைக்கும் மற்றும் உடலை குளிர்ச்சியாக்கும் ஒரு பொருள் தான் புதினா. எனவே இந்த புதினாவைக் கொண்டு காலையில் உங்கள் வீட்டில் செய்யும் இட்லி, தோசைக்கு சட்னியாக அடிக்கடி செய்து சாப்பிடுங்கள்.
அதுவும் இந்த புதினா சட்னியை நீங்கள் வழக்கமாக செய்வது போன்று செய்யாமல், ஹோட்டலில் செய்யும் பக்குவத்தில் செய்து சாப்பிடுங்கள். இதனால் சுவை இன்னும் அருமையாக இருக்கும். முக்கியமாக இப்படி சட்னி செய்யும் போது வழக்கமாக சாப்பிடுவதை விட அதிகமாக சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு ஹோட்டலில் எப்படி புதினா சட்னியை செய்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஹோட்டல் ஸ்டைல் புதினா சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* கடலைப் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
* பச்சை மிளகாய் - 5
* பூண்டு - 20 பல்
* சின்ன வெங்காயம் - 25
* புளி - சிறிய துண்டு
* தேங்காய் - 1/4 கப்
* புதினா - 1 கைப்பிடி
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 1
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடலைப்பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு ஆகியவற்றை
சேர்த்து பொன்னிறமாக ப்ரை செய்து கொள்ள வேண்டும்.
* பின் அந்த பருப்புகளை ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள
வேண்டும்.
* மீதமுள்ள எண்ணெயில் பச்சை மிளகாயை சேர்த்து வெள்ளையாகும் வரை
வதக்கி, பின் பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து, வெங்காயம் கண்ணாடி
பதத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும்.
* பின்பு அதில் புளி, தேங்காய் மற்றும் புதினா சேர்த்து, புதினா
சுருண்டு வரும் வரை வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வறுத்த பருப்புக்களையும், வதக்கிய
பொருட்களையும் சேர்த்து, சிறிது நீர் ஊற்றி சற்று கொரகொரவென்று
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்து, சிறிது நீரை ஊற்றி
கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய்
சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்தால், சுவையான ஹோட்டல் ஸ்டைல்
புதினா சட்னி தயார்.



Click it and Unblock the Notifications











