Latest Updates
-
புதன் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 01 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 கேரட்டும், தயிரும் இருந்தா இந்த ஆந்திரா ஸ்டைல் கேரட் பச்சடியை செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
3 கேரட் இருந்தா.. இப்படி கீ ரோஸ்ட் ட்ரை பண்ணுங்க.. சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இந்தியாவின் முதல் போட்டோகிராபர் யார்? அவர் எந்த ராஜாவிடம் வேலை செய்தார் தெரியுமா? -
வீட்டில் கொசுக்கள் வரக்கூடாதா? அவற்றை விரட்ட இந்த செடிகளை வீட்டுல வாங்கி வையுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க அசாத்திய தைரியசாலிகளாம் - எந்த விஷயத்தை பார்த்தும் பயப்பட மாட்டார்களாம் -
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்!
இந்த கீரையை கஞ்சி வைச்சு குடிச்சா எடை குறைவதோடு இரத்தத்தில் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்குமாம்...
Healthy Murungai Keerai Kanji Recipe in Tamil: முருங்கை இலையில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கின்றன. அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வதால் இரத்த சிவப்பணுக்கள் அதிகரிக்கும், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்திருப்பதால் உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துக்களை கொடுக்கிறது என்பவை எல்லாம் நமக்கு தெரிந்தது தான்.
முருங்கை கீரையை வைத்து பொரியல், சூப், அடை மற்றும் வடை என பலவற்றை செய்திருப்போம். அதே முருங்கை இலையை வைத்து எப்படி கஞ்சி செய்வது என இங்கு பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:
- நொய்யரிசி - ஒரு கப்
- பூண்டு - 12 அல்லது 15
- சின்ன வெங்காயம் - 12
- முருங்கை கீரை - 5 கொத்து
- உப்பு - தேவையான அளவு
- மஞ்சள்தூள் - ¼ ஸ்பூன்
அரைக்க:
- தேங்காய் - 1 மூடி
- சீரகம் - 1 டீ ஸ்பூன்
- மிளகு - 1 டீ ஸ்பூன்
- வரமிளகாய் - 2
தாளிக்க:
- எண்ணெய் - தேவையான அளவு
- கடுகு - ¼ டீ ஸ்பூன்
- கருவேப்பிலை - 1 கொத்து
- சின்ன வெங்காயம் - 3
- உடைத்த உளுந்தம் பருப்பு - ¼ டீ ஸ்பூன்
செய்முறை:
- முதலில் முருங்கை கீரையை சுத்தம் செய்து தண்ணீரில் அலசி எடுத்து
வைத்து கொள்ளவும்.
- வெங்காயம் மற்றும் பூண்டை தோல் உரித்து சுத்தம் செய்து
கொள்ளவும்.
- வெங்காயத்தின் மேல் இருக்கும் கருப்பு நிற பூஞ்சையை நீக்க தண்ணீரில்
அலசி எடுத்து கொள்ளவும்.
- அதை உரலில் சேர்த்து இடித்து எடுத்து வைத்து கொள்ளவும்.
- தேங்காயை உங்கள் விருப்படி துருவியோ அல்லது நறுக்கியோ எடுத்து
கொள்ளவும்.
- பின் ஒரு மிக்ஸி ஜாரில் சீரகம், மிளகு, வரமிளகாய் மற்றும் துருவிய
தேங்காய் சேர்த்து அரைத்து வைக்கவும்.
- நொய்யரிசியை பாத்திரத்தில் சேர்த்து இரண்டு அல்லது மூன்று முறை
தண்ணீர் விட்டு நன்றாக அலசி எடுத்து கொள்ளவும்.
- பின் நொய்யரிசியை சமைக்கும் பாத்திரத்தில் சேர்த்து ஒரு கப்
அளவுக்கு ஐந்து டம்ளர் தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.
- அதனுடன் பூண்டு மற்றும் இடிச்ச வெங்காயத்தை சேர்த்து வேக
விடவும்.
- அது வெந்த பின்பு தேவையான அளவு உப்பு மற்றும் மஞ்சள் தூள்
சேர்க்கவும்.
- அதனுடன் அரைத்து வைத்த மசாலாவையும் சேர்த்து பச்சை வாசம் போகும் வரை
கொதிக்க விடவும்.
- பின் முருங்கைக் கீரையை சேர்த்து ஐந்து நிமிடங்கள் வேக விட்டு
இறக்கவும்.
- வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்க்கவும்.
- எண்ணெய் காய்ந்ததும் கடுகு சேர்த்து பொரிய விடவும்.
- அதனுடன் கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
- பின் உடைத்த உளுந்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை
வறுக்கவும்.
- கடைசியாக நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி கஞ்சி உடன்
சேர்த்து கிளறவும்.
- தண்ணீர் தேவைப்பட்டால் சுடு தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளலாம்.



Click it and Unblock the Notifications
