Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
மீன் வறுவலுக்கு வீட்ல இந்த மாதிரி க்ரீன் மசாலாவை செஞ்சு ப்ரை பண்ணுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்..
Green Masala Fish Fry Recipe In Tamil: விடுமுறை நாட்களில் உங்கள் வீட்டில் எப்போதும் மீன் வாங்குவீர்களா? எப்போதும் மீனை ஒரே சுவையில் தான் ப்ரை செய்வீர்களா? இந்த வாரம் மீனை வித்தியாசமான சுவையில் ப்ரை செய்து சாப்பிட விரும்புகிறீர்களா?
அப்படியானால் மீன் வறுவலுக்கு கடைகளில் விற்கப்படும் மசாலாவை வாங்குவதற்கு பதிலாக, வீட்டிலேயே க்ரீன் மசாலாவை தயார் செய்யுங்கள். இந்த மாதிரி மசாலாவை வீட்டில் செய்து மீனை ப்ரை செய்தால், சுவை இன்னும் அற்புதமாக இருக்கும். அதோடு அடுத்தமுறையில் இருந்து இப்படி தான் மீனை சமைப்பீர்கள்.

உங்களுக்கு க்ரீன் மசாலா மீன் வறுவலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே க்ரீன் மசாலா மீன் வறுவல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மீன்
* சின்ன வெங்காயம் - 10
* பச்சை மிளகாய் - 5
* கொத்தமல்லி - 1 கையளவு
* புதினா - 1 கையளவு
* இஞ்சி - 1 சிறிய துண்டு
* பூண்டு - 6 பல்
* மிளகு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* எலுமிச்சை - 1/2
* சில்லி ப்ளேக்ஸ் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கறிவேப்பிலை - 1 கொத்து
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் மீனை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் சின்ன வெங்காயம், கொத்தமல்லி, புதினா, பச்சை
மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, சீரகம் சேர்த்து நன்கு மென்மையாக
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அரைத்த விழுதை மீனுடன் சேர்த்து, மேலே எலுமிச்சை சாறு,
சில்லி ப்ளேக்ஸ் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு பிரட்டி,
குறைந்தது 1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு ஒரு நாண் ஸ்டிக் பேனை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு
தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், கறிவேப்பிலை கொத்து வைத்து,
அதன் மேல் மீன் துண்டுகளை ஒவ்வொன்றாக வைத்து, ப்ரை செய்து எடுக்க
வேண்டும். இதேப் போல் அனைத்து மீன் துண்டுகளையும் பொரித்து எடுத்தால்,
சுவையான க்ரீன் மசாலா மீன் வறுவல் தயார்.
Image Courtesy: Hyderabadi Ruchulu



Click it and Unblock the Notifications











