Latest Updates
-
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க.. -
Karadaiyan Nombu 2026: தேதி, சடங்குகள் மற்றும் எந்த நேரத்தில் மஞ்சள் சரடு கட்டுவது கணவரின் ஆயுளை அதிகரிக்கும்?
1 கப் பச்சை பயிறு இருந்தா இந்த மாதிரி குழம்பு செஞ்சு பாருங்க... தோசை, சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும்...!
Green Gram Curry Recipe in Tamil: தினமும் என்ன சமைப்பது என்பதுதான் பெரும்பாலான அம்மாக்களுக்கு இருக்கும் பெரிய பிரச்சினையாகும். அதனால்தான் பெரும்பாலும் இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற எளிய உணவுகளை செய்வதற்கு முயற்சிக்கிறார்கள். ஆனால் இட்லி, தோசை போன்றவற்றை செய்வது போல எளிதானதல்ல அவற்றுக்கு பொருத்தமான சைடிஷ் செய்வது.
பொதுவாக இட்லி, தோசைக்கு சட்னி அல்லது சாம்பார்தான் பிரதான சைடிஷாக இருக்கும். அதேபோல சப்பாத்தி, பூரிக்கு குருமா பிரதான சைடிஷாக உள்ளது. ஆனால் எவ்வளவு நாள்தான் இதே சைடிஷை சாப்பிடுவது. புதுப்புது சைடிஷ்கள் செய்யும் போது அதை வீட்டில் உள்ள அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள்.

அந்த வகையில் இட்லி, தோசை, சப்பாத்தி என்று அனைத்திற்கும் சூப்பராக இருக்கும் ஒரு சைடிஷை பற்றித்தான் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம். இந்த பச்சைப் பயிறு கிரேவி செய்வதற்கு எளிதாக இருப்பது மட்டுமின்றி சுவையாகவும் இருக்கும். அதை எப்படி செய்யலாம் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
- பச்சைப்பயறு - 100 கிராம்
- பெரிய வெங்காயம் - 2
- தக்காளி - 2
- நறுக்கிய பச்சை மிளகாய் - 1
- துருவிய இஞ்சி - 1 டீஸ்பூன்
- நறுக்கிய பூண்டு - 1 டீஸ்பூன்
- மிளகாய்த்தூள் - அரை ஸ்பூன்
- மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
- எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
- கடுகு - அரை டீஸ்பூன்
- சீரகம் - அரை டீஸ்பூன்
- கறிவேப்பிலை - சிறிதளவு
- கொத்தமல்லி - சிறிதளவு
- அரைத்த தேங்காய் விழுது - 2 ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
செய்முறை:
- முதலில் பச்சைப்யறை நான்கு மணி நேரம் ஊற வைத்து உப்பு சேர்த்து மென்மையாக வேக வைத்துக் கொள்ளவும்.
* கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
- அதன்பின் பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.
- பின்னர் நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- வெங்காயம் நன்கு வதங்கியதும் மிளகாய்த்தூள்,மஞ்சள் தூள் சேர்க்கவும்,உப்பு சேர்த்து வதக்கவும்.
- மசாலா பச்சை போனதும் தேங்காய் விழுது சேர்த்து வதக்கவும்.
- தேவைக்கு ஏற்ப சிறிது தண்ணீர் சேர்க்கவும். கொதி வந்தவுடன் வேகவைத்த பாசிப்பயறை சேர்த்து திரும்பவும் கொதிக்க விடவும்.
- இறுதியாக நறுக்கிய மல்லி இலை சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான பச்சைப் பயறு குருமா ரெடி.



Click it and Unblock the Notifications











