பூண்டு ரொட்டி

தினமும் ஒரே மாதிரியான சப்பாத்தி சாப்பிட்டு போரடிக்குதா? அப்படியானால் இன்று சற்று வித்தியாசமான சப்பாத்தி/ரொட்டியை செய்து சாப்பிடுங்கள். அது தான் பூண்டு சப்பாத்தி/பூண்டு ரொட்டி.

Posted By:

நீங்கள் தினமும் சப்பாத்தி சாப்பிடுபவரா? தினமும் ஒரே மாதிரியான சப்பாத்தி சாப்பிட்டு போரடிக்குதா? அப்படியானால் இன்று சற்று வித்தியாசமான சப்பாத்தி/ரொட்டியை செய்து சாப்பிடுங்கள். அது தான் பூண்டு சப்பாத்தி/பூண்டு ரொட்டி. இந்த சப்பாத்தி மிகவும் ஆரோக்கியமானது. வாய்வு தொல்லையால் அவதிப்படுபவர்களுக்கு இந்த சப்பாத்தி மிகவும் நல்லது.

Garlic Roti Recipe In Tamil

உங்களுக்கு பூண்டு ரொட்டி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பூண்டு ரொட்டியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* கோதுமை மாவு - 2 கப்

* பூண்டு பல் - 1/4 கப்

* எண்ணெய் - 2 டீஸ்பூன்

* எள்ளு - 2 டீஸ்பூன்

* உப்பு - சுவைக்கேற்ப

* தண்ணீர் - தேவையான அளவு

* எண்ணெய்/நெய்/வெண்ணெய் - டோஸ்ட் செய்ய தேவையான அளவு

செய்முறை:

* முதலில் பூண்டு பற்களை மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

* பின் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, சுவைக்கேற்ப உப்பு, நறுக்கிய பூண்டு, எண்ணெய் சேர்த்து கையால் பிசைய வேண்டும்.

* பின்பு மெதுவாக நீரை ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்கு மென்மையாக பிசைந்து கொண்டு, 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

* பிறகு பிசைந்த மாவை எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும்.

* அடுத்து சப்பாத்தி கட்டையில் ஒரு உருண்டையை வைத்து லேசாக தேய்த்துக் கொள்ள வேண்டும். பின் அதன் மேல் எள்ளு விதைகள் மற்றும் பொடியாக நறுக்கிய பூண்டை தூவி, மீண்டும் தட்டையாக தேய்ய வேண்டும். இதேப் போல் அனைத்து மாவையும் தேய்த்தக் கொள்ள வேண்டும்.

* பின்னர் தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும், தேய்த்த ரொட்டிகளை ஒவ்வொன்றாக போட்டு, எண்ணெய்/நெய் சேர்த்து முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், பூண்டு ரொட்டி தயார்.

Image Courtesy: sharmispassions

[ of 5 - Users]
Desktop Bottom Promotion