Latest Updates
-
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க.. -
கேது-சந்திரன் உருவாக்கும் கிரகண யோகம் 2026: இந்த 3 ராசிக்காரங்க கோடிகளை குவிக்கப்போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
இந்த ஒரு மூலிகை டீயை தொடர்ந்து 14 நாட்கள் குடித்தால் சிறுநீரக கல் கரையுமாம் - கூறும் ஆயுர்வேத டாக்டர்!
பிரெஞ்சு ப்ரைஸ்
மழை பெய்யும் போது மாலை வேளையில் நன்கு சூடாக ஏதேனும் சாப்பிட நினைத்தால், அதற்கு பிரெஞ்சு ப்ரைஸ் ஒரு அற்புதமான தேர்வாக இருக்கும்.
நீங்கள் அடிக்கடி பிரெஞ்சு ப்ரைஸ் வாங்கி சாப்பிடுவீர்களா? என்ன தான் கடைகளில் அதை வாங்கி சாப்பிட்டாலும், அளவாகவே சாப்பிட முடியும். அதுவே அதை வீட்டில் செய்தால், எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம் அல்லவா? பலருக்கும் கடைகளில் விற்கப்படும் பிரெஞ்சு ப்ரைஸ் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள ஆர்வம் இருக்கும். அதிலும் உருளைக்கிழங்கு பிரியர் என்றால் நிச்சயம் இந்த சமையலை தெரிந்து கொள்ள விரும்புவார்கள்.

மழை பெய்யும் போது மாலை வேளையில் நன்கு சூடாக ஏதேனும் சாப்பிட நினைத்தால், அதற்கு பிரெஞ்சு ப்ரைஸ் ஒரு அற்புதமான தேர்வாக இருக்கும். உங்களுக்கு பிரெஞ்சு ப்ரைஸ் ரெசிபியின் செய்முறையை தெரிந்து கொள்ள வேண்டுமானால், இக்கட்டுரையைத் தொடர்ந்து படியுங்கள். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* உருளைக்கிழங்கு - 2 (பெரியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் உருளைக்கிழங்கின் தோலை நீக்கிவிட்டு, அதை நீள நீளமாக வெட்டிக் கொள்ளவும். அப்படி வெட்டும் போது உருளைக்கிழங்கு மிகவும் தடிமனாகவோ அல்லது மிகவும் மெல்லியதாகவோ இருக்காமல் பார்த்து வெட்டுங்கள்.
* பின் வெட்டிய உருளைக்கிழங்கை நீரில் ஒருமுறை அலசி விட்டு, குளிர்ந்த நீரில் 10-15 நிமிடம் ஊற வையுங்கள்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடேற்றவும்.
* எண்ணெய் நன்கு சூடானதும், நெருப்பைக் குறைத்துவிட்டு, முதலில் உருளைக்கிழங்கு துண்டுகளைப் போட்டு நன்கு மொறுமொறுப்பாகும் வரை பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
* பொரித்த உருளைக்கிழங்கு துண்டுகளை டிஷ்யூ பேப்பரின் மேல் வைத்து, குளிர வைக்கவும். பின் அதன் மேல் உப்பு தூவி ஒருமுறை பிரட்டி விட்டால், சுவையான பிரெஞ்சு ப்ரைஸ் தயார். இதை தக்காளி சாஸ் உடன் சேர்த்து சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும்.
குறிப்புகள்:
* சரியான பிரெஞ்சு பிரைஸ் தயாரிக்க வேண்டுமானால், வெட்டிய உருளைக்கிழங்கை ஐஸ் கட்டி நீரில் போட்டு 20-30 நிமிடம் ஊற வைத்து பயன்படுத்துங்கள்.
* கருப்பாகாமல் நல்ல மொறுமொறுப்பான ப்ரைஸ் தயாரிக்க, ஊற வைத்த உருளைக்கிழங்கை 2-3 டிஷ்யூ பேப்பரில் போட்டு நன்கு உலர்த்திவிட்டு, பின் பொரிக்கவும்.
* அதிக அளவு பிரெஞ்சு ப்ரைஸ் செய்யும் போது, முதலில் ஒருமுறை எண்ணெயில் போட்டு அரைவேக்காடாக பொரித்து எடுத்துக் கொள்ளவும். பின் பரிமாற போகும் போது, மீண்டும் பொரித்த உருளைக்கிழங்கை எண்ணெயில் போட்டு பொரித்து எடுங்கள்.



Click it and Unblock the Notifications







