Latest Updates
-
இந்தியாவின் முதல் பெண்களுக்கான பள்ளி எப்போது திறக்கப்பட்டது? எந்த ஊரில் திறக்கப்பட்டது தெரியுமா? -
உருளைக்கிழங்கை ஒருதடவை இந்த மாதிரி கொங்குநாடு ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க...டக்கரான சைடிஷா இருக்கும்...! -
அமெரிக்க-ஈரான் போரால் துபாயில் சரசரவென குறையும் தங்கம் விலை...இந்தியாவிலும் தங்கம் விலை குறையுமா? உண்மை என்ன? -
இந்த 4 ராசிக்காரங்க உயிரை கொடுத்தாவது குடும்பத்தை பாதுகாக்கும் ரியல் ஹீரோவாக இருப்பார்களாம்...உங்க ராசி என்ன? -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. தொப்பையும், உடல் எடையும் இருமடங்கு வேகத்துல குறையும்.. -
இன்றைய ராசிபலன் 07 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம்...! -
சனிப்பெயர்ச்சி 2026: இந்த 5 ராசிக்காரங்க ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கணுமாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
சுரைக்காயை இந்த மாதிரி பச்சடி செஞ்சு பாருங்க... இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்குமே டக்கரான சைடிஷா இருக்கும்... -
'நிறங்களின் ராஜா' என்று அழைக்கப்படும் நிறம் எது தெரியுமா? உங்களுக்கு இந்த கலர் பிடிக்குமானு சொல்லுங்க...! -
தஞ்சாவூர் கல்யாண சாம்பார் ரெசிபி... இந்த மாதிரி சாம்பார் வைச்சு பாருங்க... வீட்ல எல்லாரும் ஊத்தி குடிப்பாங்க..
இறால் வாங்குனா.. ஒருமுறை இந்த மாதிரி தொக்கு செய்யுங்க.. அடிக்கடி செய்ய சொல்லி கேப்பாங்க..
Prawn Thokku Recipe In Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி இறால் வாங்குவீர்களா? ஆனால் எப்போதும் ஒரே சுவையில் தான் இறாலை சமைத்து சாப்பிடுவீர்களா? சற்று வித்தியாசமான சுவையில் இறாலை செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்டைலில் இறால் தொக்கு செய்யுங்கள்.
இந்த இறால் தொக்கு செய்வதற்கு சுலபமாக இருப்பதோடு, அட்டகாசமான சுவையில் இருக்கும். ஏன் பிடிக்காதவர்கள் கூட விரும்பி சாப்பிடக்கூடியவாறு அருமையாக இருக்கும். இந்த இறால் தொக்கு சாதத்துடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.

உங்களுக்கு இறால் தொக்கு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே இறால் தொக்கு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
அரைப்பதற்கு...
* மல்லி - 1/2 டீஸ்பூன்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* மிளகு - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 5 (நீரில் 20 நிமிடம் ஊற வைத்தது)
தொக்குவிற்கு...
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* இறால் - 1/2 கிலோ
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் மல்லி, சோம்பு, சீரகம், மிளகு, ஊற வைத்த
வரமிளகாய் சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக்
கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக
வதக்க வேண்டும்.
* பிறகு அதில் தக்காளி மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு
மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* அதன் பின் அரைத்த மசாலாவை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி, சுவைக்கேற்ப
உப்பு சேர்த்து நன்கு எண்ணெய் பிரியும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் கழுவி வைத்துள்ள இறாலை சேர்த்து நன்கு கிளறி, மூடி
வைத்து 3 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* பின் மூடியைத் திறந்து ஒருமுறை கிளறி, மீண்டும் மூடி வைத்து 10
நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* 10 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, அதில் கரம் மசாலாவை சேர்த்து,
1 நிமிடம் கிளறி விட வேண்டும்.
* இறுதியாக கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான இறால்
தொக்கு தயார்.
Image Courtesy: Today's Samayal



Click it and Unblock the Notifications











