Latest Updates
-
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்..
நாவூறும் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு - ஈஸியாக எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க...
Ennai Kathirikkai Kuzhambu Recipe In Tamil: மதியம் என்ன சமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் கத்திரிக்காய் உள்ளதா? அப்படியானால் அந்த கத்திரிக்காய் கொண்டு குழம்பு செய்யுங்கள். அதுவும் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்யுங்கள். இந்த குழம்பை சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் போது, சுவை அவ்வளவு பிரமாதமாக இருக்கும்.
பொதுவாக எண்ணெய் கத்திரிக்காய் குழம்பிற்கு மசாலாவை அரைத்து செய்வார்கள். ஆனால் இந்த குழம்பு பேச்சுலர்களும் செய்யக்கூடிய வகையில் ஈஸியான செய்முறையைக் கொண்டிருக்கும். ஒருமுறை இந்த குழம்பை உங்கள் வீட்டில் உள்ளோருக்கு செய்து கொடுத்தால், பின் வாரம் ஒருமுறை நிச்சயம் இந்த குழம்பை செய்ய சொல்லிக் கேட்பார்கள்.

உங்களுக்கு எண்ணெய் கத்திரிக்காய் குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கத்திரிக்காய் - 300 கிராம்
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
வதக்கி அரைப்பதற்கு...
* சின்ன வெங்காயம் - 10
* பூண்டு - 10 பல்
* தக்காளி - 1 (நறுக்கியது)
* சீரகம் - 1 டீஸ்பூன்
* மிளகு - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* மல்லித் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் (விருப்பமிருந்தால்)
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* உப்பு - சுவைக்கேற்ப
* புளி - பெரிய எலுமிச்சை அளவு (2 1/2 கப் நீரில் ஊற வைத்து சாறு
எடுத்துக் கொள்ளவும்.)
* கெட்டியான தேங்காய் பால் - 1/2 கப்
* வெல்லம் - சிறிது
செய்முறை:
* முதலில் கத்திரிக்காயை கீறிவிட்டு, நீரில் போட்டுக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், கத்திரிக்காயை சேர்த்து, சிறிது உப்பு தூவி
மிதமான தீயில் வைத்து, வதக்கி ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அதே எண்ணெயில் சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* பின்பு அதில் தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் சீரகம், மிளகு சேர்த்து நன்கு வதக்கி இறக்கி குளிர
வைக்க வேண்டும்.
* அடுத்து மிக்சர் ஜாரில் வதக்கி குளிர வைத்த பொருட்களை சேர்த்து,
அத்துடன், மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள் மற்றும் காஷ்மீரி
மிளகாய் தூள் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம், பெருங்காயத்
தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி
கிளறி, நன்கு பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் புளிச்சாற்றினை சேர்த்து கிளறி சுவைக்கேற்ப உப்பு
சேர்த்து, குழம்பு சுண்டும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.
* குழம்பு சற்று சுண்டியதும், அதில் வதக்கி வைத்துள்ள கத்திரிக்காயை
சேர்த்து, அத்துடன் சிறிது வெல்லத்தை சேர்த்து கிளறி, மூடி வைத்து,
மிதமான தீயில் வைத்து, 10 நிமிடம் நன்கு எண்ணெய் பிரியும் வரை கொதிக்க
வைத்து இறக்கினால், சுவையான எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு தயார்.



Click it and Unblock the Notifications











