Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
எண்ணெய் கத்திரிக்காய் பொரியல்
மதியம் சாதத்திற்கு பத்தே நிமிடத்தில் ஒரு பொரியல் செய்ய வேண்டுமா? அப்படியானால் உங்கள் வீட்டில் கத்திரிக்காய் இருந்தால், அதைக் கொண்டு ஒரு சுவையான மற்றும் அற்புதமான எண்ணெய் கத்திரிக்காய் பொரியல் செய்யலாம்.
மதியம் சாதத்திற்கு பத்தே நிமிடத்தில் ஒரு பொரியல் செய்ய வேண்டுமா? அப்படியானால் உங்கள் வீட்டில் கத்திரிக்காய் இருந்தால், அதைக் கொண்டு ஒரு சுவையான மற்றும் அற்புதமான எண்ணெய் கத்திரிக்காய் பொரியல் செய்யலாம். இது சாம்பார் சாதத்துடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். அதோடு குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.

உங்களுக்கு எண்ணெய் கத்திரிக்காய் பொரியல் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே எண்ணெய் கத்திரிக்காய் பொரியலின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* நல்லெண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 1
* கறிவேப்பிலை - சிறிது
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 5 பல்
* கத்திரிக்காய் - 4 (பெரியது மற்றும் நீளமாக துண்டுகளாக்கப்பட்டது)
* மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், சோம்பு, வரமிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்னர் அதில் வெங்காயம், பூண்டு சேர்த்து 2 நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு கத்திரிக்காயை சேர்த்து நன்கு வதக்கி, உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, கத்திரிக்காயை நன்கு வேக வைக்க வேண்டும்.
* கத்திரிக்காய் நன்கு வெந்து சுருங்கியதும், அதில் மிளகாய் தூள் சேர்த்து பிரட்டி விட வேண்டும்.
* மிளகாய் தூளின் பச்சை வாசனை போனதும், அடுப்பை அணைத்து இறக்கினால், சுவையான எண்ணெய் கத்திரிக்காய் பொரியல் தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications











