அடுத்தமுறை முட்டையை இப்படி மசாலா செய்யுங்க.. சாதம், சப்பாத்திக்கு டக்கரா இருக்கும்...

Posted By:

Egg Masala Recipe In Tamil: உங்கள் வீட்டில் தினமும் முட்டை செய்வீர்களா? அதுவும் எப்போதும் ஒரே மாதிரி தான் முட்டையை சமைத்து சாப்பிடுவீர்களா? அப்படியானால் இன்று சற்று வித்தியாசமான சுவையில் முட்டையை மசாலா செய்து சாப்பிடுங்கள். இந்த முட்டை மசாலா சாதத்துடன் மட்டுமின்றி, சப்பாத்தியுடனும் சாப்பிட அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக இந்த முட்டை மசாலா செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு முட்டை மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முட்டை மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Egg Masala How To Make a Egg Masala Recipe

தேவையான பொருட்கள்:

அரைப்பதற்கு...

* வெங்காயம் - 2
* பூண்டு - 12 பல்
* புளி - சிறு துண்டு
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
* உப்பு - சுவைக்கேற்ப

முட்டை புர்ஜிக்கு...

* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* முட்டை - 5
* மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சிறிது

முட்டை மசாலாவிற்கு..

* எண்ணெய் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* சீரகம் -1/2 டீஸ்பூன்
* தண்ணீர் - சிறிது

செய்முறை:

* முதலில் மிக்சர் ஜாரில் வெங்காயம், பூண்டு, புளி, மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து சற்று கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், முட்டைகளை உடைத்து ஊற்றி கிளறி, வேக வைக்க வேண்டும்.
* முட்டை நன்கு வெந்ததும், அதில் மிளகுத் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி, ஒரு தட்டில் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 1/2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம் சேர்த்து தாளித்து, அரைத்த விழுதை சேர்த்து 5 நிமிடம் நன்கு பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பின் அதில் சிறிது நீரை ஊற்றி நன்கு கிளறி விட வேண்டும்.
* பிறகு அதில் முட்டையை சேர்த்து குறைவான தீயில் வைத்து நன்கு கிளறி விட வேண்டும். இப்படி ஒரு 10 நிமிடம் கிளறி விட்டு வேக வைத்து இறக்கினால், சுவையான முட்டை மசாலா தயார்.

Image Courtesy: Apoorvaa's Nalabagam

[ of 5 - Users]
Story first published: Monday, May 20, 2024, 15:21 [IST]
Desktop Bottom Promotion