Latest Updates
-
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம்
சப்பாத்திக்கு 2 முட்டை வெச்சு ஒருமுறை இந்த மசாலா செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்...
Egg Kheema Masala Recipe In Tamil: இரவு உங்கள் வீட்டில் பெரும்பாலும் சப்பாத்தி தான் செய்வீர்களா? அந்த சப்பாத்திக்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? வழக்கமாக செய்யும் சைடு டிஷ் போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமாக செய்ய விரும்புகிறீர்களா?
உங்கள் வீட்டில் 2 முட்டை உள்ளதா? அப்படியானால் அந்த முட்டைகளைக் கொண்டு கீமா மசாலா செய்யுங்கள். இந்த முட்டை கீமா மசாலா செய்வதற்கு சுலபமாக இருப்பதோடு, வீட்டில் உள்ளோர் விரும்பி சாப்பிடுமாறு ருசியாக இருக்கும்.

உங்களுக்கு முட்டை கீமா மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முட்டை கீமா மசாலாவின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளங்கள்.
தேவையான பொருட்கள்:
* வேக வைத்த முட்டை - 2
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* இஞ்சி - 1 இன்ச்
* பூண்டு - 3-4 பல்
* பச்சை மிளகாய் - 2
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வெங்காயம் - 2
* உப்பு - சுவைக்கேற்ப
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 3/4 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன்
* மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1/4 டீஸ்பூன்
* தக்காளி - 2 (அரைத்தது)
* தண்ணீர் - தேவையான அளவு
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் வேக வைத்த முட்டைகளை துருவிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய்,
கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து சிறிது உப்பு
தூவி, வெங்காயத்தை கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள், கரம்
மசாலா, மிளகுத் தூள், சீரகத் தூள் சேர்த்து குறைவான தீயில் வைத்து
சிறிது நேரம் கிளறி விட வேண்டும்.
* பின் அதில் அரைத்து வைத்துள்ள தக்காளியை சேர்த்து, பச்சை வாசனை போக
கிளறி விட்டு வேக வைக்க வேண்டும்.
* பின் தேவையான அளவு நீரை ஊற்றி, பச்சை வாசனை போக நன்கு கொதிக்க வைக்க
வேண்டும்.
* இறுதியாக துருவிய முட்டையை சேர்த்து நன்கு கிளறி, 1 கொதி விட்டு,
கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான முட்டை கீமா மசாலா
தயார்.



Click it and Unblock the Notifications











