முருங்கைக்காய் கத்திரிக்காயை வெச்சு ஒருடைம் இப்படி கார குழம்பு செய்யுங்க.. அப்புறம் பாருங்க அடிக்கடி செய்வீங்க

Posted By:

Drumstick Brinjal Curry Recipe In Tamil: என்ன தான் நீங்கள் புளிக்குழம்பு வைத்தாலும், அது சுவையாக இருப்பதில்லையா? அப்படியானால் ஒருமுறை முருங்கைக்காய் கத்திரிக்காய் கொண்டு காரக் குழம்பை செய்யுங்கள். இந்த கார குழம்பு சாதத்துடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். மேலும் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். முக்கியமாக இந்த ஸ்டைலில் குழம்பை செய்தால் வீடே நல்ல மணத்துடன் இருக்கும்.

உங்களுக்கு முருங்கைக்காய் கத்திரிக்காய் காரக் குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முருங்கைக்காய் கத்திரிக்காய் கார குழம்பின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Drumstick Brinjal Curry How To Make a Drumstick Brinjal Kara Kuzhambu Recipe

தேவையான பொருட்கள்:

* புளி - 1 எலுமிச்சை அளவு
* நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
* துவரம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 20
* பூண்டு - 10 பல்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* முருங்கைக்காய் - 1
* கத்திரிக்காய் - 6
* தக்காளி - 2 (அரைத்தது)
* குழம்பு மிளகாய் தூள் - 3 டீஸ்பூன்

அரைப்பதற்கு...

* தேங்காய் - 2 சில்லு
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* மிளகு - 1/2 டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் புளியை நீரில் 15 நிமிடம் ஊற வைக்கும் போது, அத்துடன் குழம்பிற்கு தேவையான அளவு உப்பையும் சேர்த்து ஊற வைக்க வேண்டும். பின் அதை நன்கு பிசைந்து, சாறு எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, வெந்தயம் சேர்த்து தாளிக்க வேண்டும். பின் துவரம் பருப்பை சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
* அடுத்து அதில் சின்ன வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து 3 நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் நறுக்கிய முருங்கைக்காய் மற்றும் கத்திரிக்காய் சேர்த்து, கத்திரிக்காயின் நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.
* பின் அதில் குழம்பு மிளகாய் தூளை சேர்த்து 1 நிமிடம் கிளறி, புளிச்சாற்றினை ஊற்றி கிளறி, நன்கு 10 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* குழம்பு கொதிப்பதற்குள் மிக்சர் ஜாரில் தேங்காய், சீரகம், மிளகு சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* குழம்பு நன்கு கொதிக்க ஆரம்பித்தது, லேசாக சுண்டிய பின், அரைத்து வைத்துள்ள தேங்காயை சேர்த்து, 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான முருங்கைக்காய் கத்திரிக்காய் கார குழம்பு தயார்.

Image Courtesy: Apoorvaa's Nalabagam

[ of 5 - Users]
Story first published: Tuesday, April 16, 2024, 14:01 [IST]
Desktop Bottom Promotion