Just In
- 2 hrs ago
மிதுனம் செல்லும் புதனால் ஜூலை 17 வரை இந்த 4 ராசிக்காரங்க நிறைய பிரச்சனைகளை சந்திப்பாங்களாம்.. உஷார்...
- 2 hrs ago
சிறுநீரக பிரச்சினைகளை விரைவாக குணப்படுத்த இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிட்டால் போதும்...!
- 2 hrs ago
மா இலைகளை இப்படி சாப்பிட்டீங்கனா... உங்களுக்கு சர்க்கரை நோய் மற்றும் புற்றுநோய் வராதாம் தெரியுமா?
- 9 hrs ago
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகவும் தனிமையாக உணரக்கூடும்...
Don't Miss
- Finance
ஸ்டாலின் சொன்ன முக்கிய விஷயங்கள்.. சென்னை முதலீட்டாளர்கள் மாநாட்டில் நடந்தது என்ன?
- Automobiles
பிரமாண்டமாக அரங்கேறிய டெலிவரி நிகழ்வு.. படத்துல இருக்க எல்லா ஸ்கூட்டரையும் ஒரே நாள் டெலிவரி கொடுத்திருக்காங்க!
- Movies
சோழ பட்டத்து இளவரசன் ஆதித்ய கரிகாலன்... பொன்னியின் செல்வனில் விக்ரமின் அசத்தல் போஸ்டர் வெளியீடு
- News
பிறந்தநாளுக்குக் கூட வராத தளபதி! கோவிலில் விஜய் பெயரில் அர்ச்சனை! உருகி வேண்டிய எஸ்ஏசி! அப்பா சார்!
- Technology
நிறைய பெண்கள் கையில் iPhone இருக்குற இந்த நேரத்துல இப்படி ஒரு ஆபத்தா?
- Sports
"ஆத்தாடி.. இவ்ளோ உயரமா?? " போல் வால்ட்டில் உலக சாதனை படைத்த ஸ்வீடன் வீரர்.. வியப்பில் ரசிகர்கள்!
- Travel
அழகும் சாகசமும் நிறைந்த சுதாகட் கோட்டையில் ட்ரெக்கிங் செய்யலாம் வாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
Coconut Rice Recipe : சுவையான... தேங்காய் சாதம்
நம்மில் பலருக்கும் தக்காளி சாதம், எலுமிச்சை சாதம், புளி சாதம், தேங்காய் சாதம் என்று வெரைட்டி ரைஸ் சாப்பிட பிடிக்கும். இதில் நீங்கள் தேங்காய் சாத பிரியர் என்றால், அதை சுவையான முறையில் செய்ய தெரிந்து கொள்ள ஆவலாக இருந்தால், இன்று தேங்காய் சாதத்தை எப்படி சுவையான முறையில் தயாரிப்பது என்பதைக் காண்போம்.
இந்த தேங்காய் சாதம் பேச்சுலர்களும் செய்வதற்கு ஏற்றவாறு சுலபமாக இருக்கும். அதோடு இது குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். இந்த தேங்காய் சாதத்தின் செய்முறையைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சாதம் - 1 கப்
* துருவிய தேங்காய் - 1/4 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 1
* வரமிளகாய் - 1
* கறிவேப்பிலை - சிறிது
* முந்திரி - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் கறிவேப்பிலை, பச்சை மிளகாய், வரமிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின்பு அதில் முந்திரியை சேர்த்து பொன்னிறமாக வறுத்து, துருவிய தேங்காயை சேர்த்து 2 நிமிடம் குறைவான தீயில் வறுக்க வேண்டும்.
* பிறகு அதில் சாதத்தை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி நன்கு கிளறி இறக்கினால், சுவையான தேங்காய் சாதம் தயார்.
Image Courtesy: sharmispassions