தினமும் காலையில் இந்த ரொட்டியை ஒன்னு சாப்பிடுங்க.. உடல் எடை வேகமாக குறைஞ்சு ஒல்லியாவீங்க..

Posted By:

Chola Rotti Recipe In Tamil: நீங்க குண்டா இருக்கீங்களா? உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை கரைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளீர்களா? அதற்காக காலையில் ஓட்ஸ் போன்ற உணவை உட்கொண்டு வருகிறீர்களா? ஆனால் உங்களுக்கு ஓட்ஸ் பிடிக்காதா? அதற்கான சிறந்த மாற்று காலை உணவை தேடிக் கொண்டிருக்கிறீர்களா?

அப்படியானால் முழு தானியங்கள் மற்றும் சிறு தானியங்களை காலை உணவாக உட்கொள்ளுங்கள். அதுவும் சோளத்தைக் கொண்டு ரொட்டி செய்து சாப்பிட்டால், உடல் எடையில் இன்னும் நல்ல மாற்றத்தைக் காணலாம். இந்த சோள ரொட்டியை காலையில் உட்கொண்டு வந்தால், நீண்ட நேரம் பசி எடுக்காமல் வயிறு நிறைந்திருக்கும். மேலும் இதில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் மலச்சிக்கல் பிரச்சனையும் ஏற்படாது.

Chola Rotti How To Make a Jowar Rotti Recipe

உங்களுக்கு சோள ரொட்டியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சோள ரொட்டி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* சோள மாவு - 1 கப்
* கோதுமை மாவு - 1/4 கப்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1/4 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
* பாலக் கீரை - 1 கைப்பிடி (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - 1 கைப்பிடி (பொடியாக நறுக்கியது)
* தயிர் - 2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* சுடுநீர் - தேவையான அளவு
* எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் சோள மாவை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் கோதுமை மாவு, இஞ்சி பூண்டு பேஸ்ட், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
* பின்பு அதில் காஷ்மீரி மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகுத் தூள், மல்லித் தூள், கரம் மசாலா ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய பாலக்கீரை, கொத்தமல்லி, தயிர், பெருங்காயத் தூள், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கைகளால் நன்கு கிளறி விட வேண்டும்.
* பின் அதில் கொஞ்சம் கொஞ்சமாக சுடுநீரை ஊற்றி கிளறி, சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
* பின்பு 5 நிமிடம் மூடி வைத்து ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் ஒரு வாழை இலையை எடுத்து, அதில் எண்ணெய் தடவிக் கொள்ள வேண்டும். பின் பிசைந்த மாவை சிறிது எடுத்து உருட்டி, இலையில் வைத்து, கைகளில் எண்ணெய் தடவி தட்டையாக தட்டிக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், தட்டி வைத்துள்ள ரொட்டியை போட்டு, எண்ணெய் ஊற்றி, முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், சுவையான சோள ரொட்டி தயார். இதேப் போன்று அனைத்து மாவையும் ரொட்டியாக சுட்டு எடுத்துக் கொள்ள வேண்டும்.

[ of 5 - Users]
Story first published: Monday, February 3, 2025, 6:30 [IST]
Desktop Bottom Promotion